போலீஸ்காரர் வீட்டுக்கே ஸ்கெட்ச்.. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய டவுசர் கொள்ளையர்கள்… விழுப்புரத்தில் நள்ளிரவு பயங்கரம்…!

Spread the love

விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அடுத்த வளவனூர் தோப்பு காலனி பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர் (32). இவர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு அதிகாலை நேரத்தில் தனது வீட்டில் அவர் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில், முகமூடி அணிந்து ‘டவுசர்’ மட்டுமே அணிந்திருந்த மூன்று பேர் கொண்ட கொள்ளைய கும்பல், ராஜசேகரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அங்கு ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த ராஜசேகரின் மனைவி கங்காதேவியின் (30) கழுத்தில் இருந்த 4.5 பவுன் தங்க நகையை அந்த கும்பல் பறிக்க முயன்றது. திடுக்கிட்டு எழுந்த கங்காதேவி தனது நகையை இறுகப் பிடித்துக்கொண்டு கூச்சலிடவே, பக்கத்து அறையில் இருந்த ராஜசேகர் ஓடி வந்து மின்விளக்கை ஒளிரச் செய்துள்ளார்.

நிலைமையை உணர்ந்த கொள்ளையர்கள், சட்டென்று ராஜசேகரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதோடு, அங்கிருந்த குழந்தையை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், அந்த கும்பல் கங்காதேவியின் கழுத்தில் இருந்த 4.5 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு வீட்டின் பின்புறத் தோட்டம் வழியாக மின்னல் வேகத்தில் தப்பி ஓடியது. கூச்சலிட்டபடி ராஜசேகர் பொதுமக்களுடன் இணைந்து துரத்தியும், இருளைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வளவனூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களைச் சேகரித்தனர். பறிபோன நகையின் மதிப்பு சுமார் ₹4 லட்சம் என்று கூறப்படுகிறது. போலீஸ் ஏட்டு வீட்டிலேயே புகுந்து, உயிரைப் பறிப்பதாக மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், முகமூடி அணிந்த அந்த மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

3 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

7 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

11 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

15 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

18 minutes ago

“எந்த கணவனும் பார்க்கக்கூடாத அந்த ஒரு கோலம்”… திருமணமான 100 நாட்களில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… இறுதியில் காத்திருந்த ன் அதிர்ச்சி…!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…

25 minutes ago