ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை அகற்றத் திட்டமிட்டு வருகின்றன. அமெரிக்கா வளைகுடா நாடுகளில் உள்ள தளங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதால், அதற்குப் பதிலடியாக ஈரான் கத்தார், குவைத், அமீரகம் போன்ற நாடுகளின் எண்ணெய் வளங்கள் மற்றும் விமான நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குகிறது. இதனால் சம்பந்தமே இல்லாமல் பெரும் பொருளாதார நஷ்டத்தையும், உயிரிழப்புகளையும் சந்திக்கும் அரபு நாடுகள், இனிமேல் அமெரிக்காவிற்குத் தளம் கொடுத்து ஆபத்தை விலைக்கு வாங்க விரும்பவில்லை எனத் தெரிகிறது.
குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகம் தனது பாதுகாப்பைத் தானே உறுதி செய்து கொள்ளும் திறன் படைத்தது என்றும், இனி அமெரிக்காவின் ராணுவ உதவி தங்களுக்குத் தேவையில்லை என்றும் அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். மேம்பட்ட ஆயுதங்களை வாங்க அமெரிக்காவுடன் உறவு தேவையே தவிர, அவர்கள் இங்குத் தளம் அமைத்துத் தங்குவது அவசியமில்லை என்பதே இவர்களின் வாதமாக உள்ளது. ஒருவேளை அரபு நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவை வெளியேற்றினால், அது மத்திய கிழக்கின் அதிகார மையத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் இதனை உற்று நோக்கி வருகின்றன.
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…