Categories: சினிமா

நான் ஸ்கூல்ல படிக்கும் போது இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணாம miss பண்ணிட்டேன்… தான் படித்த பள்ளி விழாவில் SK பகிர்வு…

Spread the love

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். அதற்கு பிறகு சீமராஜா, வேலைக்காரன், மாவீரன் அயலான் போன்ற கமர்சியல் வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்றார் சிவகார்த்திகேயன்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி சிவகார்த்திகேயன் புகழின் உச்சிக்கு சென்றார். அதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சமீபத்தில் அவர் தான் படித்த பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்று கலந்திருந்தார். அப்போது சிறுவயதில் பள்ளியில் தான் எப்படி இருப்பேன் என்பதை பகிர்ந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் கூறியது என்னவென்றால் நான் ஸ்கூல் படிக்கும்போது நிறைய சேட்டை பண்ணி இருக்கேன். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நான் பண்ணாமல் மிஸ் செய்து விட்டேன். அது என்னவென்றால் நான் Culturals எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். ஸ்டேஜ் ஏறினால் எங்கு நம்மை கிண்டல் செய்வார்களோ கலாய்பார்களோ என்று நான் கலந்து கொள்ளவே இல்லை. அப்படி இருந்தவன் தான் இன்றைக்கு இந்த இடத்தில் இருக்கிறேன் என்று ஓபனாக பேசி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

admin

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

12 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

26 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

30 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

34 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

38 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

41 minutes ago