தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யின் குடும்ப வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து எதிர்க்கட்சிகள் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், தனது மகனைத் தமிழ்நாட்டு மக்களுக்காகவே தத்துக் கொடுத்துவிட்டதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இருட்டில் மக்கள் பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதாலேயே விஜய் மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதைத் தவிர்க்கிறார் என்றும், கரூரில் நடந்த கசப்பான சம்பவமே இதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ வெளியாவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இணையத்தில் படம் கசிந்த விவகாரத்திற்குப் பின்னால் பெரிய அரசியல் சதி இருப்பதாக எஸ்.ஏ.சி அதிரடியாகக் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வளர்ச்சியைத் தடுக்க சினிமாத் துறையையும் ஒரு கருவியாக எதிரிகள் பயன்படுத்துவதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எத்தனை தடைகள் வந்தாலும் விஜய்யின் மன உறுதியைக் குலைக்க முடியாது என்றும், அவர் தனது இலக்கில் உறுதியாக இருப்பார் என்றும் தனது பேட்டியில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில்,…