“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

Spread the love

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, பின்னர் அதை ‘டெலிட்’ செய்ததாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அந்தப் பெண் காவலர் தூத்துக்குடி மாவட்ட ‘சிங்கப்பெண் சிறப்புப்படைக்கு’ பணி மாறுதல் பெற்ற போதிலும், அவரை விடுவிக்காமல் ஆய்வாளர் திலீபன் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர், இந்த விவகாரத்தைத் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கடந்த மே 6-ஆம் தேதி காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற பெண் காவலரின் கணவர், இதுகுறித்து ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, காவல் நிலையத்தின் முன்பாகவே ஒருவரையொருவர் சரமாரியாக மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. இந்த மோதலின் போது, ஆத்திரமடைந்த ஆய்வாளர் திலீபன், பெண் காவலரின் கணவரைத் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே, ஆய்வாளர் திலீபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “என் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை; காவல் நிலையத்திலுள்ள பெண் காவலர்களை என் பிள்ளைகளாகவே கருதுகிறேன். வேலை செய்யாதபோது சற்று கடுமையாகப் பேசியிருக்கலாமே தவிர, பாலியல் தொந்தரவு தரவில்லை, விசாரணைக்கு எனது செல்போனை ஒப்படைக்கத் தயார்” எனத் தனது தரப்பு நியாயத்தைக் கூறினார். எனினும், இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்த நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) தேஷ்முக் சேகர் சஞ்சய், ஆய்வாளர் திலீபனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Muthu Mani

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

5 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

5 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

5 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

5 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

5 மணத்தியாலங்கள் ago