ஐயோ, மனுஷன் உயிர் இப்படியா போகணும்?… கணவரோடு இரவில் பைக்கில் சென்ற புதுப்பெண்… நொடி பொழுதில் நடந்த சோக சம்பவம்…!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பிடாரிச்சேரி புத்தூரை சேர்ந்த மதன் (30) என்பவருக்கு திருமணம் ஆகி சங்கீதா (27) என்ற மனைவி உள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் பரமக்குடி வட்ட பாலம் அருகே உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்துள்ளனர். உடல் எடை குறைப்பு பயிற்சி கூடம் நடத்துபவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் மதுரையில் நடந்துள்ளது.

அதில் மதன் மற்றும் சங்கீதா தம்பதியினர் கலந்து கொண்டே விளையாடினர். போட்டி முடிந்த பிறகு இருவரும் பைக்கில் மதுரையிலிருந்து பரமக்குடிக்கு சென்றனர். நள்ளிரவில் பரமக்குடி அருகே உள்ள கமுதகுடி நான்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பைக் நிலை தடுமாறி சாலையோர ஒரு பள்ளத்தின் தடுப்புச் சுவரியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் இருந்த கணவன் மனைவி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். பைக் மட்டும் பாலத்தில் விழுந்து கிடந்துள்ளது.

பள்ளத்தில் விழுந்ததில் சங்கீதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மதனுக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

2 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

2 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

2 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

2 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

2 மணத்தியாலங்கள் ago