Connect with us
Usman ali

HISTORY

வைரச் சுரங்கம், தங்கக் குவியல், தனி பேங்க்.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு.. யார் இந்த உஸ்மான் அலிகான்?

இன்று நாம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் எலான் மஸ்க், ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் சப்தமே இல்லாமல் உலகமே இந்தியர் ஒருவரின் சொத்துமதிப்பினைக் கண்டு வாயைப் பிளந்தது. இந்தியாவில் அம்பானி, அதானி, டாடா, விப்ரோ என பெரும் பணக்காரர்கள் லிஸ்டில் இருக்க 100 வருடங்களுக்கு முன்பே உலகையே தனது பண பலத்தால் ஆண்டவர்தான் உஸ்மான் அலி கான்.

1911 முதல் 1948 ஆம் ஆண்டு வரையில் சுமார் 37 ஆண்டுகள் ஹைதராபாத்தை ஆண்டவர் தான் நிஜாம் மிர் உஸ்மான் அலி கான். இவருடைய அன்றைய சொத்து மதிப்பை இன்றைய பணவீக்கத்திற்கு இணையாகக் கணக்கிட்டுப் பார்த்த போது அதிர்ச்சி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.

   
Mir usman

#image_title

1911 இல் தனது தந்தையின் மரணத்திற்குப் பின்பு ஹைதராபாத் நிஜாமாகப் பதவியேற்றார் மிர் உஸ்மான் அலி கான், சுமார் நாற்பது ஆண்டுகளாக ஹைதராபாத்-ன் நிஜாம் ஆக இருந்தார். 1948 ஆம் ஆண்டு இந்தியாவுடன் ஹைதராபாத்-ஐ இணைக்கப்பட முன்பு ஆண்ட கடைசி நிஜாம், மிர் உஸ்மான் அலி கான். இவருடைய சொத்து மதிப்பு, செல்வம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்றால் மிகையில்லை.

இவங்க கதையைக் கேட்டாலே சாதிக்கத் தோன்றும்.. உலகின் சக்தி வாய்ந்த பெண்ணாக மாறிய இந்திரா நூயி

கடந்த ஆண்டின் பணவீக்க அடிப்படையில் கணக்கிடும் போது மீர் உஸ்மான் அலி கானின் இன்றைய நிகரச் சொத்து மதிப்பு 1,94,79,55,15,00,000.00 ரூபாய் அதாவது ரூ. 19.47 லட்சம் கோடி ரூபாய். இதை டாலராகக் கணக்கிட்டால் 230 பில்லியன் டாலர்.

230 பில்லியன் டாலர் என்றால் இன்று உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க்-கின் சொத்து மதிப்பான 292 பில்லியன் டாலருக்கு சற்றுக் குறைவு ஆனால் முகேஷ் அம்பானியின் 101.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் 2.3 மடங்கு அதிகம்.

Usman

#image_title

ஹைதராபாத் நகரின் அடையாளமாக விளங்கும் உஸ்மானியா மருத்துவமனை, உஸ்மானியப் பல்கலைக்கழகம்,  ஹைதராபாத் ஸ்டேட் வங்கி ஆகியவை இவர் நிறுவியதாகும்.  அந்தக் கால அரசர்கள் தங்கம் வைரம் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளனர். அந்த வகையில் உஸ்மான் அலி, ஹோகினூர் வைரம், பிரின்ஸி டயமண்ட், ரீஜன்ட் டயமண்ட், விட்டல் ஸ்பாக் டைமண்ட், ஹோப் டைமண்ட் ஆகிய விலை மதிப்பில்லாத வைரங்களை வைத்திருந்தார். இதன் படி உஸ்மான் அலி கான் பேப்பர்வெயிட்-க்கு பதிலாக வைரத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனர் இவர் தான்..! பலரும் அறியாத சுவாரசிய தகவல் இதோ..

உஸ்மான் அலி கான் அந்தக் காலகட்டத்திலேயே ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு மின்சாரம், ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் விமானப் பாதைகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். இதுமட்டும் அல்லாமல் பல நல திட்டங்களுக்குப் பணத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கும் பெரும் வள்ளலாகவும் இருந்துள்ளார்.

இதேபோல் ஜாமியா நிஜாமியா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மற்றும் தாருல் உலூம் தியோபந்த் போன்ற சில முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு நன்கொடை அளித்து, கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

author avatar
Continue Reading

More in HISTORY

To Top