Connect with us
Indira Nooyi

HISTORY

இவங்க கதையைக் கேட்டாலே சாதிக்கத் தோன்றும்.. உலகின் சக்தி வாய்ந்த பெண்ணாக மாறிய இந்திரா நூயி

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

உணர்ச்சி ததும்ப பாரதியார் பெண்களைப் பற்றி பாடிய வரிகள் இவை. சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று உலகின் தலைசிறந்த அதிக சக்தி வாய்ந்த பெண்மணிகளுள் ஒருவராகத் திகழ்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்திரா நூயி. உலக பொருளாதாரத்தினை விரல் நுனியில் வைத்து இன்று பல முன்னனி நிறுவனங்களையே தனது சாதுர்யமான முடிவுகளால் அலற வைப்பதில் இந்திரா நூயி கில்லாடி.

   

சுருக்கமாகச் சொல்லப் போனால் சர்கார் படத்தில் விஜய் நடித்த சுந்தர் ராமசாமி கதாபாத்திரம் தான் இந்த இந்திரா நூயி. இந்தியா மண் பெற்றெடுத்த தவப்புதல்வி இந்திரா நூயி, ஒரு பெண் முடிவெடுத்தால், எதையும் செய்து முடிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண் புலி.

1955-ல் சென்னையில் பிறந்த இந்தரா நூயி ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். பின் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியிலும் பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்திலும் (எம்பிஏ), அதன் பின்னர் ஏல் பல்கலைக்கழகத்திலும் (எம்ஸ்) கல்வி பயின்றார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தில்  தொழில் வாழ்க்கையை தொடங்கிய இந்திரா, மற்றும் டெக்ஸ்ட்டைல் ஃபர்ம் பியர்ட்செல் லிமிடட் நிறுவனங்களில் பிராடெக் மேலாளராக பணிபுரிந்தார். பின்னர் பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தில் செயலுத்தி ஆலோசகராக பணியில் சேர்ந்த இந்திரா, மோடோரோலாவில் உயர் பதவியை வகித்தார்.

Indra

#image_title

பின்னர் இந்திரா நூயி, 1994 ஆம் ஆண்டு பெப்சிகோ நிறுவனத்தில் சேர்ந்தார். தனது புத்திக் கூர்மையாலும்,  திறமையாலும், அயராத உழைப்பாலும் நிறுவனத்தின் பல வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் காரணமானார். அவரது திறமையும், தனித்துவமும் கவனிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நிறுவனத்தின் சிஇஓ ஆக பதவி உயர்வு பெற்றார். அந்த வேளையில், பெப்சிகோ நிறுவனத்தின் 44 ஆண்டுகால வரலாற்ரில் அவர் நிறுவனத்தின் ஐந்தாவது சிஇஓ ஆனார். இந்த பதவியை பெறுவதற்கு முன், அவர் பெப்சி நிறுவனத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தார்.

இவரது தலைமையின் கீழ் இயங்கிய பெப்ஸிகோ நிறுவனம் குறிப்பிட்ட ஆண்டுகளிலேயே அசுர வளர்ச்சி கண்டு பல மடங்கு லாபத்தைப் பார்த்தது. கடந்த 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் 50 குறிப்பிடத்தக்க பெண்களின் பட்டியலில் இந்திரா நூயியின் பெயரும் இடம் பெற்றது. மேலும் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் டைம்ஸின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் அவர் இடம் பெற்றார்.

Indira

#image_title

2008 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் அவரை மூன்றாவது மிகவும் சக்திவாய்ந்த பெண்மணியாக அறிவித்தது. 2014 இல், ஃபோர்ப்ஸில் அவருக்கு 13 ஆவது இடம் கிடைத்தது. பார்ச்சூன் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு பட்டியலில் வணிகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். 7 அக்டோபர் 2010 இல், ஃபார்ச்சூன் பத்திரிகை அவரை உலகின் 6 வது சக்திவாய்ந்த பெண்மணியாக மதிப்பிட்டது. பார்ச்சூனின் 2015 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில், இந்திரா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இவரது சாதனைகளைப் பாராட்டி இவருக்கு மத்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், சிஇஓ வர்ல்ட் இதழால் இந்திரா நூயி “உலகின் சிறந்த சிஇஓ-களில்” ஒருவராக பெயரிடப்பட்டார்.

author avatar
Continue Reading

More in HISTORY

To Top