Connect with us
harry potter

HISTORY

தோல்வி மேல் தோல்வி.. மனம் தளராமல் கற்பனையை காசாக்கி ஹாரிபாட்டர் தந்த ரௌலிங்

வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வி கண்டு தனக்கிருந்த ஒரே திறமையான கற்பனையை காசாக்கி பலகோடிகளை அள்ளிய எழுத்தாளராக மாறியவர்தான் ஜே.கே.ரௌலிங். இவருடைய கற்பனை எழுத்தில் பிறந்து பின்னாளில் உலகையே புரட்டிப் போட்ட ஒரு நாவல்தான் ஹாரிபாட்டர்.

இளமையில் வறுமை. படித்த படிப்பிற்கு சரியான வேலை இல்லை. காதல் திருமணம்,
கையில் பெண் குழந்தை. அதன் பிறகு கணவரின் பிரிவு. திடீரென, தனக்கு ஒரே
ஆதரவாக இருந்த தன் அம்மாவும் இறந்து போக, தனி மரமாக நின்றார். இப்படி
தோல்வி தோல்வி எதிலும் தோல்வி. வாழ்க்கையில் அதிகம் தோல்விகளே. ஆனாலும்
எப்படியும் வெற்றியை வசப்படுத்த வேண்டும் என்கிற போராட்டம். ஒரு கட்டத்தில் சாதித்தே விட்டாள் அந்தப் பெண்மணி.

   
Harry

#image_title

சிறுவயதில் இருந்து மாயாஜால கற்பனைக் கதைகள் எழுதும் ஆர்வம் அவளிடம்
தொடர்ந்து கொண்டிருந்தது. அதன் மேல் கவனத்தை திருப்பினாள்.  இப்படி தோல்வியைக் கண்டு தளராது போராடி வெற்றி பெற்று, இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் மாயாஜால எழுத்தாற்றலைப் பெற்று விளங்கும் அந்த சாதனைப் பெண்மணி யார் தெரியுமா? பிரபல “ஹாரி பாட்டர்” (Harry Potter) புத்தகங்களின் மூலம் உலகையே கட்டிபோட்ட நாவலாசிரியை ஜே.கே.ரௌலிங்.

“ஹாரி பாட்டர்” நாவல்களை எழுதியதன் மூலம் இவர் உலகப்புகழ் பெற்றார். உலகிலேயே அதிகமாகப் பணம் ஈட்டும் எழுத்தாளர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இவருடைய இள வயது நண்பர்களான விக்கி பாட்டர், இயன் பாட்டர் ஆகிய இருவருமே பிற்காலத்தில் இவர் “ஹாரி பாட்டர்” நாவல் எழுத மூலகாரணமாக அமைந்தனர்.

ஜீரோ to 1000 கோடி Business.. சாதித்த ஈரோட்டுத்தமிழன்.. Milky Mist உருவான வரலாறு

1990களில் ரயிலுக்காக ஒருமுறை ரௌலிங் காத்திருந்தார். இந்நிலையில் நான்கு மணி நேரம் தாமதமாக வந்தது ரயில். இதுவே அவரின் வாழ்க்கையைத் திருப்பிப் போட்டது. அப்போது அவர் மனதில் உதித்ததுதான் “ஹாரி பாட்டர்” நாவலுக்கான மூலக்கதை. அதைப் பல பதிப்பாளர்களிடம் கொண்டுபோய் நீட்ட, அவர்கள் நிராகரித்தனர்.

harry potter

#image_title

அதன் பிறகு, லண்டனின் மிகச் சிறிய பதிப்பு நிறுவனமான ப்ளும்ஸ்பரி, “ஹாரி பாட்டர்” நாவலுக்கு 1,000 பிரதிகளுக்கு 2,250 பவுண்டு தருவதாக ஒப்புக்கொண்டது. அந்த நாவல் வந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தது. அடுத்தடுத்து பல பாகங்களை எழுதிய ரௌலிங்  நினைத்துக் கூட பார்க்காத வகையில் 40 கோடி பிரதிகள் உலகம் முழுவதும் விற்றுத் தீர்ந்தன. மேலும் புத்தக விற்பனையில் 700 கோடி பவுண்டுகளை ஈட்டி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ஹாரிபாட்டர் திரைப்படங்களாக வெளியாகி அவையும் பெரும் வெற்றி பெற்று வசூலையும் வாரிக் குவித்தன. முடியும் என்று தொடர்ந்து முன்னேறுபவர்களுக்கு வெற்றி ஒருநாள் கிடைத்தே தீரும் என்பதற்கு ரெளிலிங் வாழ்க்கையே உதாரணம்.

author avatar
Continue Reading

More in HISTORY

To Top