Connect with us
Gold

LIFESTYLE

இந்த மாதிரி தங்கத்தை வாங்கிப் பாருங்க.. மவுசே குறையாம அப்படியே அதிக லாபத்துக்கு விற்கலாம்..!

நடுத்தர மக்களின் மிகச் சிறந்த சேமிப்பாக தங்கம் உள்ளது. மேலும் கையில் பணம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு தங்கம் ஒரு பொன்முட்டையிடும் வாத்து ஆகும். ஏனெனில் தங்கத்தை உடனடியாக பணமாக மாற்றலாம். உலகம் முழுவதும் தங்கத்திற்கு நாளுக்கு நாள் மவுசு ஏறிக் கொண்டே செல்கிறது. ஆனால் அப்பேற்பட்ட தங்கத்தை எப்படி வாங்கினால் சிறந்தது, ஏமாறாமல் தங்கம் வாங்கும் டிரிக்ஸ் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பெரும்பாலான கடைகளில் தங்கம் வாங்கும் போது தங்க அளவை விட சுமார் 10% செய்கூலி, 5% சேதாரம், 3% ஜி எஸ் டி, என ஓன்றன் மீது ஓன்றாக சுமார் 19% அதிகமாக தர வேண்டி இருக்கும். விற்கும் போது தேய்மானம், உரசிப் பார்த்ததில் குறைவது, வாங்கும் விலை என சுமார் 10% குறைவாக விற்க நேரிடும். எனவே ஆபரண தங்கம் பொதுவாக வாங்கிய அடுத்த நிமிடம் 30% மதிப்பு குறைந்துவிடும். மேலும் வங்கிகளில் தங்கத்தை அடமானம் வைக்கும் போது அதன் மதிப்பில் இருந்து கிராமுக்கு 1000 ரூபாய் வரை குறைவாகவே வழங்கப்படுகிறது.

   
Gold 1

#image_title

மாட்டு லாடத்தை எடைக்குப் போட்டு சென்னை வந்தவர்.. இன்று பல கோடிகளின் அதிபதி..

எனவே தங்கத்தை கட்டிகளாகவோ பிஸ்கட்டாகவோ வாங்குவது சிறந்தது. இதில் செய்கூலி சேதாரம் இல்லை. ஆனால் விற்பனை வரி உண்டு என்பதால் 5.5% அதிகம் கொடுத்து வாங்கி விற்கும் போது விலை மிகச்சிறிய வித்தியாசத்தில் வாங்கிக்கொள்ளப்படும். இதில் வாங்கியவுடன் சுமார் 5.5% நட்டம். இதை நகையாக மாற்றிக்கொள்வதாக இருந்தால், மீண்டும் ஆபரண தங்கத்தின் மதிப்பிற்கு குறைந்துவிடும்.

என்ன, உங்கள் குழந்தைகள் பெரியவர்களாகும்போது அப்போதைய டிசைன்களில் நகை செய்துகொள்ள முடியும், அல்லது அப்போதைய தேவைக்கேற்ப விற்கலாம். ஆபரணத்தை விட இது சிறந்த தேர்வாக தோன்றினாலும், இதை அணியவும் முடியாது, பாதுகாப்பதும் கடினம், செலவும் பத்திரங்களை விட கூடுதல்.

#image_title

தங்க பத்திரங்கள்

இவை மியூச்சுவல் பண்டு, அரசு 2.5% வட்டிதங்க பத்திரங்கள் போன்றவற்றில் போடும்போது போது 0.06% மட்டுமே வரியாக செல்லும். 99.94% நமக்கே நமக்கு தான். அரசு பத்திரங்கள் வாயிலாக ஆண்டுக்கு 2.5% வட்டியும் கிடைக்கும்.

பிற்காலத்தில் நகையாக மாற்ற வேண்டும் என்றாலும் அதை அரசு வங்கி, தபால் அலுவலகம் வழியாக ஐந்தாண்டுக்கு பிறகு ஓப்படைத்து, அன்றைய தங்க மதிப்பிற்கு இணையாக பணத்தை பெற்று நகை வாங்கிக்கொள்ளலாம்.

ஒற்றை வீடியோவால் திடீரென சர்ச்சையில் சிக்கிய சின்னக்குயில் சித்ரா.. வரிஞ்சு கட்டிடு வந்த குஷ்பு.. உண்மையில் நடந்தது என்ன..?

கட்டிகளை விட இது லாபகரமானதும், பாதுகாப்பானதும் ஆகும். என்ன இந்த பத்திரங்களை கையிலோ, காதிலோ மாட்டிக் கொண்டு திரிய முடியாது. இருந்தாலும் தங்கத்தை ஆபரணங்களில் முதலீடு செய்வதைக் காட்டிலும் காயினாகவோ, பத்திரமாகவோ வாங்குவதே சிறந்தது. அவ்வாறு ஆபரணமாக வேண்டுமென்றால் கவரிங் நகைகளை அணிந்து கொள்ளுங்கள். பாதுகாப்பு, செலவு குறைவு எனப் பல நன்மைகள் உண்டு.

author avatar
Continue Reading

More in LIFESTYLE

To Top