Connect with us
So

CINEMA

அரசியல்வாதியாக இல்லாமலேயே அரசியல் களத்தில் கில்லியாடிய சோ.. ‘துக்ளக்‘ உருவான சுவாரஸ்ய சம்பவம்

இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளர்களின் லிஸ்ட் எடுத்தால் அதில் சோ.ராமசாமிக்கு எப்பவும் தனி இடம் உண்டு. தனது நையாண்டி எழுத்தால் அரசியல் உலகையே ஆட்டிப் படைத்தவர். ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் தலையெழுத்தையே நிர்ணயிக்கிற சக்தி கொண்ட பத்திரிக்கையாளராகத் திகழ்ந்தவர் தான் சோ.

நாடகம், சினிமாத்துறையிலிருந்து, பத்திரிக்கை உலகில் நுழைந்தவர் அங்கும் சிம்மாசனமிட்டு தனது ஆணித்தரமான கருத்துக்களால் அரசியல்வாதிகளை ஆட்டிப் படைத்தவர்.  ஒருசமயம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விழாவொன்றில் கலந்துகொண்ட சோ, அரசியல் உள்ளிட்ட பலதுறை கேள்விகளுக்கும் பதிலளித்தார்; பாராட்டப் பெற்றார்.

   

வீடு திரும்பும்போது, உடனிருந்த நண்பர், ” நடிகராக இருக்கும் நீ, உனக்குத் தெரியாத அரசியலை ஏன் பேசவேண்டும்?” என்று கேட்டார். சோ, “எனக்கும் அரசியல் தெரியும்” என்றார். பேச்சு தொடர்ந்தது. முடிவில் நண்பர், ” உனது அரசியலறிவைப், பத்திரிக்கையில் வெளிப்படுத்தி, பாராட்டு வாங்க முடியுமா?” என்று சவால் விட உடனே சோ, “நானே பத்திரிக்கை ஆரம்பித்து, எனது அரசியலறிவை வெளிப்படுத்தப்போகிறேன் பார்!” என்று சவாலை ஏற்று, 20 நாட்களில் ஆரம்பித்த பத்திரிக்கைதான் “துக்ளக்”.

So 1

#image_title

சோ நடிப்பில் பிரபலமான முதல்நாடகம், “சம்பவாமி யுகே யுகே”. அப்போது, தமிழகத்தில், பக்தவத்சலம் ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியை மறைமுகமாகச் சாடி சில வசனங்கள் அந்த நாடகத்தில் இடம்பெற்றிருந்தன. எனவே, தமிழக அரசு, அந்தநாடகத்தைத் தடைசெய்யவே, அதை எதிர்த்து, சோ, உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தாா். சோவின் மனுவிலுள்ள வாதங்களுக்கு, வலுவான எதிர்வாதத்தை, அரசு வழக்கறிஞர் எவ்வளவோ முயன்றும் வைக்க இயலவில்லை. எனவே, தமிழக அரசிடம் நாடகத்திற்கு அனுமதியளிக்குமாறு கூற, அரசும் அனுமதித்தது; வழக்கும் முடிவடைந்தது.

இதவிடவா உங்களுக்குச் சோதனை வந்திடப் போகுது..? தாழ்வு மனப்பான்மையை தன்னம்பிக்கையாக மாற்றி ஜெயித்த பாலம் கல்யாணசுந்தரம்

சோ எழுதிய “வாஷிங்டனில் நல்லதம்பி” நாவலில், கருணாநிதியை, மிகவும் நையாண்டிசெய்திருப்பார். படிக்க ஆரம்பித்தால் ஒரே மூச்சில் படித்துவிட்டுத்தான் வைக்கத் தோன்றும். அந்த அளவிற்கு, கருணாநிதியின் அரசியல்−திரையுலகச் செயல்பாடுகளைப் பகடிசெய்து, நகைச்சுவைக் கதகளி ஆடியிருப்பார் சோ. கொந்தளித்த தி.மு.கவினர், இந்த நாவலை வாங்கிக் கிழித்தும், எரித்தும் கோபம் தணிந்தனர்.

அரசியலில், எக்கட்சியிலும் இல்லாத சோ, தனது தலைவராக காமராஜரை மட்டுமே ஏற்றார். எனினும், காமராஜருடன் தான் மாறுபட்ட விஷயங்களில், அவரை வெளிப்படையாகவே எதிர்த்தார் சோ. கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய மூவருக்குமே, அரசியல் ரீதியிலான எதிர்ப்பாளராக சோ விளங்கினாலும், தனிப்பட்டமுறையில், அவர்களுடனான நட்பைத் தொடர்ந்தார் சோ.

Continue Reading

More in CINEMA

To Top