தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை கிளப்பி வருகின்றார். நடிகர் தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார், மீனா, ஸ்ரேயா கோஷல் என பல நடிகர்களை சரமாரியாக பேசி வருகின்றார். அந்த வகையில் ஸ்ரேயா கோஷலையும் இவர் விட்டு வைக்கவில்லை. ரேடியோவில் ஆர்ஜே பின்னணி, பாடகி என பன்முகத்தன்மை கொண்டவர் சுசித்ரா.

பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடி பிரபலமானவர் சுசித்ரா. பாடல்கள் மூலமாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றாரோ இல்லையோ, சுசி லீக் என்பதன் மூலமாக தலைப்புச் செய்தியாக மாறிவிட்டார். தனது twitter அக்கவுண்டில் இருந்து சுசி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாக மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இவரது அக்கவுண்ட்டை யாரோ ஹேக் செய்து இது போன்ற செயல்களை செய்து விட்டதாக அப்போதே விளக்கம் அளித்திருந்தார். பின்னர் கடந்த 8 வருடங்களாக இவர் எங்கிருந்தார் என்பது கூட தெரியாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தனது கணவர் கார்த்திக் குமார் மீது குற்றம் சாட்டை தொடங்கிய இவர் அதையடுத்து நடிகர் தனுஷ் அவரின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரிசா உள்ளிட்ட பலரையும் விட்டு வைக்காமல் தொடர்ந்து அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார்.
அவரது கணவர் கார்த்திக் குமார் ஓரின செயற்கையாளர், நடிகர் தனுஷும், கார்த்திக் இருந்தார்கள் என்று பல குற்றச்சாட்டுகளை வைத்து வந்த இவர் நடிகை திரிஷாவின் விட்டு வைக்கவில்லை. அவர் ஒருமுறை குடித்துவிட்டு நடிகர் விஜய் வீட்டு முன் நின்று பாடல் பாடி நடனமாடியதாக கூறினார். இந்நிலையில் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷலையும் அவர் விட்டு வைக்கவில்லை.

அவர் ஒரு ஃபேக் சிங்கர். இந்த கலாச்சாரத்தை ஸ்ரேயா கோஷல் தான் ஸ்டார்ட் பண்ணாங்க. அவரது பாடலில் வாய்ஸ் மட்டும் தான் இருக்கும் ஒரு பீல் இருக்காது. சிரி பாடுவது போல் இருக்கும். பீலிங் மற்றும் அந்த குரல் வளம் ஜானகி அம்மா பாடலில் இருக்கும். அதன் பிறகு எந்த ஒரு பாடகி குரலிலும் அதுபோன்ற குரல் வளம் இல்லை என அவரையும் விட்டு வைக்காமல் பேசி இருக்கிறார் பாடகி சுசித்ரா.
