தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ் குறித்தும் சச்சையான விஷயங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மீனாவுக்கும் தனுஷுக்கும் திருமணமாகப் போகிறது என்று கூறுகிறது. மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் பாடகி சுசித்ரா பல நடிகைகளின் சில அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதில் நடிகைகள் ஆண்ட்ரியா, திரிசா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாக மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து எனது அக்கவுண்டை யாரோ ஹேக் செய்து இது போன்ற வேலைகளை செய்து இருக்கிறார்கள்.

இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று பாடகி சுசித்ரா விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து சுசித்ரா இந்த சுசி லீக்ஸ் தொடர்பாக விளக்கம் கொடுத்து வந்தார். அதில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் தான் தனது அக்கவுண்டை வைத்து எப்படி எல்லாம் செய்தார் எனவும் அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று திருமணமான இரண்டு வருடத்திலேயே நான் கண்டுபிடித்து விட்டேன்.
ஒரு மருத்துவர் உன் கணவர் ஓரின சேர்க்கையாளராக என்று எனக்கு சந்தேகம் இருப்பதாக கூறினார். அதேபோல் தனுஷும் கார்த்திக்கும் நீண்ட நேரம் ஆக ஒரே அறையில் தனியாக இருந்தார்கள். அது குறித்து யாராவது ஒருவர் எனக்கு விளக்கம் அளித்தே ஆக வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் இருவரும் பிராங் செய்கிறேன் என்ற பெயரில் இப்படி என்னை மாட்டி விட்டார்கள்.

இயக்குனர் ஜவஹரின் மொபைல் போனை வாங்கி கார்த்திக்கு கண்டபடி மெசேஜ் செய்வார் தனுஷ் அதுவும் ஒருவகையான பிராங்க் என்று கூறுவார்கள். இப்படி பிராங்க் விஷயத்திற்கு திரிசாவே தானாக தன் போட்டோக்களை கொடுத்தார். நடிகர் தனுஷுக்கு மீனாவுக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்று போற போக்கில் கூறிவிட்டார். இதை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருந்ததாவது “அந்த பேட்டியில் தனுஷ் மீனா குறித்து சுசித்ரா பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன மனநிலையில் இதை சொன்னார் என்று தெரியவில்லை. அதைக் கேட்கும் போது மிகவும் பேரதிர்ச்சியாக இருக்கிறது. தனுஷ் ஏற்கனவே விவாகரத்து செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் குறித்து பல செய்திகள் இணையத்தில் வலம் வரும் நிலையில் சுசித்ரா இப்படி கூறியது உண்மையா பொய்யா என தெரியாத ஒரு இடத்தில் நம்மை கொண்டு போய் வைக்கின்றது.

மேலும் சுசித்ரா யாரோ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் இது அந்த அளவுக்கு பேசும் பொருளாக இருந்திருக்காது. ஆனால் 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்திருக்கின்றார். தனுஷ் மற்றும் திரிஷா ஆகியோருடன் நெருங்கிக் பழகக் கூடிய ஒரு நபராக இருந்திருக்கின்றார். இப்படி இருக்கும் சமயத்தில் சுசித்ரா இப்படி பேசி இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தப் போகிறது” என்று அந்தணன் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
