புனே நகரில் மதுபோதையில் காரில் அதிவேகமாகச் சென்ற இளைஞர்கள் குழு ஒன்று, ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வீதிகளில் ரகளையில் ஈடுபட்டுள்ளது. காரின் நான்கு ஜன்னல்களையும் திறந்து வைத்துக்கொண்டு பீர்பாட்டில்களுடன் சென்ற அவர்கள், இடுப்புக்கு மேல் வெளியே எட்டிப் பார்த்தபடி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். இது அவர்களது உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் சென்ற பிற பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
அந்த இளைஞர்கள் லா காலேஜ் பகுதியில் இருந்து சேனாபதி பாபட் சாலை வழியாக நல் ஸ்டாப் மற்றும் டெக்கான் பகுதியை நோக்கி காரில் சென்று வழிநெடுகிலும் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆபத்தான சாகசங்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது.
https://twitter.com/HateDetectors/status/2087451373483028584/video/1
வீடியோவின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட டெக்கான் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட வாகனத்தைக் தடமறிந்து அதிலிருந்த நான்கு இளைஞர்களைக் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…