Categories: சினிமா

பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ‘மாமன்னன்’… 50-வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

Spread the love

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரவீணா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

சாதி வேறுபாட்டை பேசும் படைப்பாக இத்திரைப்படம் உருவாகியிருந்தது. சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது.

ஜூன் மாதம் 29ம் தேதியன்று ரிலீசான இத்திரைப்படம் இதுவரை திரையரங்குகளில் 55 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக திரை வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

படம் இன்னமும் சில திரையரங்குகளில் ஓடி வருகிறது. இப்படம் ரிலீஸாகி ஓரிரு நாளிலேயே சகசஸ் மீட் வைத்திருந்தனர்.

அப்போது பேசிய உதயநிதி ‘இது விரைவில் நடத்தப்பட்ட விழானு சொன்னீங்க. கண்டிப்பா 50ஆவது நாள் விழா வச்சு எல்லாருக்கும் ஷீல்ட் தருவோம்.

நான் இது தான் என்னுடைய கடைசி சினிமா மேடைனு நினைச்சேன். கண்டிப்பா 50வது நாள் நிகழ்ச்சி உண்டு’ என்று கூறினார்.

அவர் சொன்னபடி நேற்று  ‘மாமன்னன் 50வது நாள் கொண்டாட்டம்’ நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ஏ ஆர் ரஹ்மான் என முன்னணி நட்சத்திரங்களும், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தற்பொழுது இந்த விழாவின் புகைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டும் வருகிறது.

Begam

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

9 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

22 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

27 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

32 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

36 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

41 minutes ago