ஒரே ஒரு உண்மை… சொன்னா தமிழ்நாடே தாங்காது…. வனிதா விஜயகுமார் உடைத்த அதிர்ச்சி ரகசியம்… பின்னணியில் இருக்கும் ‘டாப்’ நபர்….!

Spread the love

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளும், சர்ச்சைகளின் நாயகியுமாக வலம் வரும் நடிகை வனிதா விஜயகுமார் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்று, சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. யூடியூப் தளம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தனது முதல் காதல் குறித்து அவர் பேசியுள்ள அதிரடி கருத்துக்கள் தான் தற்போதைய ஹாட் டாபிக். “என்னுடைய முதல் காதல் பற்றி இப்போது என்னால் எதையும் வெளிப்படையாக பேச முடியாது; நான் முதலில் யாரை காதலித்தேன் அல்லது என்னை யார் முதலில் காதலித்தார்கள் என்பதை வெளியே சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடே அதிரும்” என்று வனிதா கூறியிருப்பது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்த ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார், தொடர்ந்து மாணிக்கம், ஹிட்லர் பிரதர்ஸ் (மலையாளம்), தேவி (தெலுங்கு) போன்ற படங்களில் நடித்தார். 1999-க்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட அவர், பின்னர் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் இயக்கிய ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சினிமா வாழ்க்கையைத் தாண்டி குடும்பப் பிரச்சனைகள், விவாகரத்து, தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட மோதல்கள் என அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் வனிதாவின் பெயர் அடிபட்டதால், ‘வனிதா என்றாலே சர்ச்சை’ என்கிற பிம்பம் ரசிகர்கள் மத்தியில் உருவானது.

இருப்பினும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று தனது துணிச்சலான குணத்தால் கவனம் ஈர்த்த வனிதா, ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகி தனது சமையல் திறமையையும் நிரூபித்தார். அண்மையில் ‘Mrs and Mr’ என்ற படத்தை தயாரித்து நடித்திருந்த அவர், அடுத்ததாக ‘லவ் ஓ லவ்’ என்கிற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படித் திரைத்துறையிலும், திரைக்கு வெளியிலும் எப்போதும் செய்திகளில் நின்றுகொண்டிருக்கும் வனிதா, தற்போது தனது காதல் ரகசியத்தை உடைக்காமல் ஒரு புதிரைப் போட்டு ஒட்டுமொத்த தமிழகத்தையும் யோசிக்க வைத்துள்ளார்.

தனது முதல் காதலைப் பற்றி மேலும் பகிர்ந்து கொண்ட வனிதா, “அப்படி ஒரு உண்மையைச் சொன்னால் தமிழகமே தாங்காது என்பதால், அதைச் சொல்லாமல் மௌனமாக இருப்பதே நல்லது. பல வருடங்களாக இந்த ரகசியத்தை எனக்குள்ளேயே புதைத்து கடந்து வந்துவிட்டேன். இந்த நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டும்தான் இருக்கும்; அந்த முதல் காதல் ரகசியம் எனக்கும், சம்பந்தப்பட்ட அந்த நபருக்கும் மட்டுமே மிக நன்றாகத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார். வனிதாவின் இந்த மர்மமான பேச்சையடுத்து, “அப்படி தமிழகமே அதிரும் அளவுக்கு வனிதா காதலித்த அந்த நபர் யாராக இருக்கும்?” என்று நெட்டிசன்கள் பலதரப்பட்ட யூகங்களையும் கேள்விகளையும் எழுப்பி, சமூக வலைதளங்களில் விவாதங்களை விறுவிறுப்பாக்கி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

5 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

27 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

41 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

41 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

50 minutes ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

57 minutes ago