“என் உயிருக்கு அவரால ஆபத்து..!” CCTV-யை கழட்டி எறிந்த கணவர்… நடிகர் மீது முதல் மனைவி கொடுத்த ஷாக்கிங் புகார்…! நடந்தது என்ன…?

Spread the love

80, 90-களில் தொடங்கி ‘பருத்திவீரன்’, ‘கோலமாவு கோகிலா’, ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் சரவணன். இவருக்கு சூர்யஸ்ரீ என்ற முதல் மனைவியும், ஸ்ரீதேவி என்ற இரண்டாவது மனைவியும் உள்ளனர். கடந்த 2003-ஆம் ஆண்டு சூர்யஸ்ரீயை காதலித்து திருமணம் செய்து கொண்ட சரவணனுக்கு, நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக, முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமலேயே கடந்த 2019-ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்பவரை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தொடக்கத்தில் எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல், சென்னை மாங்காடு அருகே உள்ள மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு மனைவிகளுடனும் சரவணன் ஒன்றாக வசித்து வந்தார். ஒரே குடியிருப்பில் தனித்தனி வீடுகளில் இவர்கள் வாழ்ந்து வந்த சூழலில், இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நடிகர் சரவணனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, அவரது முதல் மனைவி சூர்யஸ்ரீ சென்னை மவுலிவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்ததன் காரணமாக, பாதுகாப்பு நலன் கருதி தனது வீட்டின் முன்பாகக் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருந்ததாக சூர்யஸ்ரீ தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தனது அனுமதி எதையும் பெறாமல் நடிகர் சரவணன் சில ஆட்களை வைத்து அந்த கேமராவை வலுக்கட்டாயமாக அகற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் கணவர் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சூர்யஸ்ரீ அந்த புகார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Swetha

Recent Posts

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 minutes ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

10 minutes ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

21 minutes ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

39 minutes ago

“நல்லா பண்றீங்க… தினமும் உங்கள பத்திதான் பேச்சு…!” – முதலமைச்சர் விஜய்க்கு போன் போட்டு … வாழ்த்திய ரங்கசாமி…!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து…

49 minutes ago

தமிழகமே உஷார்…! வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஆபத்து… பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு…!

டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.…

1 மணத்தியாலம் ago