“பணத்தைக் கேட்டா மிரட்டி அடிக்கிறாங்க” – கமிஷனர் அலுவலகம் ஏறிய டிக்டாக் சூர்யா தேவி… நாஞ்சில் விஜயனுக்கு அடுத்த சிக்கல்..!!

Spread the love

விஜய் தொலைக்காட்சியின் ‘அது இது எது’, ‘கலக்கப்போவது யாரு’, ‘சிரிச்சா போச்சு’ போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் லேடிஸ் கெட்டப்பில் நடித்து, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நாஞ்சில் விஜயன். மேடை கலைஞராகத் தனது பயணத்தைத் தொடங்கி, விடாமுயற்சியால் பிரபலமான காமெடியனாக உயர்ந்த இவரைப் பற்றி, பிரபல டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிரடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். நாஞ்சில் விஜயன் தனக்கு நீண்டகால நண்பர் என்று குறிப்பிட்டுள்ள சூர்யா தேவி, கடந்த 2019 நவம்பரில் தனது தங்கையின் திருமணச் செலவிற்காக ₹2.10 லட்சத்தை மூன்று மாதத் தவணையில் தருவதாகக் கூறி விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் வைத்து நாஞ்சில் விஜயன் வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், மூன்று மாதங்கள் கடந்தும், கொரோனா காலகட்டத்திற்குப் பிறகும் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும் நாஞ்சில் விஜயன் அந்தப் பணத்தைத் திருப்பித் தராமல் பல்வேறு காரணங்களைக் கூறி காலதாமதப்படுத்தி வந்ததாக சூர்யா தேவி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் மீண்டும் பணத்தைக் கேட்டபோது, 2026 மே 22-ம் தேதி மதுரையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் எக்ஸ்போவிற்கு வருமாறு நாஞ்சில் விஜயன் அழைத்துள்ளார். அதன்பொருட்டு அங்கு நேரில் சென்ற சூர்யா தேவியை, பணத்தைத் தராமல் அவமதிக்கும் வகையில் பேசியதுடன், அங்கிருந்த சிலரைக் கொண்டு மிரட்டித் தாக்கியதாகவும், அந்தச் சம்பவத்தை அவர்கள் வீடியோவாகப் பதிவு செய்துகொண்டதாகவும் சூர்யா தேவி தனது புகாரில் விவரித்துள்ளார்.

மேலும், விஜே வைஷு என்பவர் நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்திருந்த சமயத்தில், அவரை ‘ஆப் செய்ய’ தன்னிடம் ஐடியா கேட்டு நாஞ்சில் விஜயன் அழைத்ததாகவும் சூர்யா தேவி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நாஞ்சில் விஜயனுடன் தான் பேசிய வாட்ஸ் அப் சேட் ஆதாரங்களை சூர்யா தேவி காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் பெறப்பட்ட இந்தப் புகார் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம், நாஞ்சில் விஜயன் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

2 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

25 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

38 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

38 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

48 minutes ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

55 minutes ago