அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில் ஒரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது. திமுகவின் போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சிலர், தங்களுக்குரிய சலுகைகளைத் தொடர்ந்து அனுபவிக்கும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொழிற்சங்கத்தில் இணைந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக, திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் அந்தந்தக் கட்சிகளின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் ‘மாற்றுப் பணி’ (On Duty) என்ற பெயரில், பணிக்கு வராமல் மாதம் ஒருமுறை மட்டும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு முழுச் சம்பளம் பெறுவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் நீண்டகாலமாகக் கடுமையான குற்றச்சாட்டு ஒன்று நிலவி வருகிறது.
இந்தச் சூழலில் தவெக இந்தத் தவறான நடைமுறையையும் அரசியல் சலுகைகளையும் ஊக்குவிக்குமா அல்லது தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குமா என்ற விவாதமும், கேள்வியும் தற்போதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக்…
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…