தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சஹானா. இவரின் நடிப்புக்கென்று பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவு தனது வில்லத்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர். இவர் சன் டிவியில் மட்டும் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியிலும் பல சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்.
பகல் நிலவு, அழகு என பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஹானா. சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவரது வீடியோக்களை பார்ப்பதற்காகவே ஒரு ரசிகர்கள் கூட்டம் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் மருத்துவர் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மேலும் இதைத்தொடர்ந்து தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து சஹானாவின் வளைகாப்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் சீரியல் நடிகை சஹானாவுக்கு குழந்தை தற்பொழுது பிறந்துள்ளது. இவர்கள் தற்பொழுது ‘எங்களுக்கு குழந்தை பிறந்திடுச்சு’ என்று கூறி இச்செய்தியினை இணையத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…
"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…
"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…