வைஷு, சூர்யா தேவியை அடுத்து இப்படியா?… நடுரோட்டில் நாஞ்சில் விஜயன் செய்த காரியம்… இணையத்தை உலுக்கும் ஷாக் வீடியோ…!

Spread the love

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நாஞ்சில் விஜயன் கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஏற்கனவே நடிகை விஜே வைஷு கொடுத்த புகார், சூர்யா தேவியுடனான பணப் பிரச்சனை என அவரது பெயர் சமூக வலைதளங்களில் அடிபட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. நடுரோட்டில் பெண் ஒருவர் பயணம் செய்த ஆட்டோவை வழிமறித்து நாஞ்சில் விஜயன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகி, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு பெண் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும்போது நாஞ்சில் விஜயன் தனது உதவியாளருடன் சேர்ந்து அவரை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்துகிறார். தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் அவர் மிகவும் கடுமையான தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட, அருகில் இருந்தவர்கள் இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். “ஏற்கனவே பல பஞ்சாயத்துகள் இருக்கும் நிலையில், இது என்ன புதுப் பிரச்சனை?” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவைப் பார்த்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து நாஞ்சில் விஜயன் தரப்பில் விசாரித்தபோது, இது ஒரு பண மோசடி தொடர்பான பிரச்சனை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் தங்களுடைய கடையில் ஆடைகளை வாங்கிக்கொண்டு, அதற்கான தொகையை “ஜிபே (GPay) மூலம் அனுப்பிவிடுகிறேன்” என்று கூறிவிட்டு பணம் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டுச் சென்றதாகவும், அதனால் தான் அவரைத் துரத்திச் சென்று ஆட்டோவை நிறுத்திப் பணம் கேட்டதாகவும் அவரது தரப்பில் கூறப்படுகிறது.

இருப்பினும், சம்பந்தப்பட்ட அந்தப் பெண் இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்து நாஞ்சில் விஜயனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஒரு தரப்பு “பணம் கொடுக்காமல் ஏமாற்றிய பெண்” என்று குற்றம் சாட்ட, மறுதரப்போ அதற்கு உடன்படாமல் வாதிடுவதால் இந்த சம்பவத்தில் உள்ள உண்மைத்தன்மை என்ன என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. இது வெறும் ஆடை வாங்கியதற்கான பணத் தகராறா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்பது குறித்த விவாதங்கள் தற்போது இணையத்தில் தீவிரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

Nanthini

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

6 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

28 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

42 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

42 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

51 minutes ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

58 minutes ago