கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு நேரிட்ட பயங்கர வெடிவிபத்து மற்றும் தீ விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 66 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த பபித் மற்றும் பணகுடி அருகிலுள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சுர்ஜித், கவின் ஆகிய 3 தமிழர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது அவர்களது குடும்பத்தினரிடையேயும், தமிழக மக்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்து குறித்து கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட முதற்கட்ட தகவலில், தொழிலாளர்கள் காயமடைந்ததும் சிலர் மாயமானதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. எனினும், ஆலைக்கு வெளியே பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவ்வித அபாயகரமான கசிவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போதைய இக்கட்டான சூழலில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து தகுந்த நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக்…
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…