இளைஞர்களே… இனி வேலை தேடி அலைய வேண்டாம்… மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

Spread the love

சென்னையில் பேக்கரி தொழில் தொடங்கி சொந்தமாக லட்சக்கணக்கில் சம்பாதிக்க விரும்பும் நபர்களுக்காகத் தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் , சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் சிறப்புப் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்க உள்ளது. இந்த அரிய பயிற்சி முகாம் வரும் 06.07.2026 முதல் 08.07.2026 ஆம் தேதி வரை, தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவிருக்கிறது.

இப்பயிற்சியில் பேக்கரி தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் மற்றும் பிராண்ட் மேனேஜ்மென்ட் பற்றிய முழுமையான விவரங்கள் கற்றுத்தரப்படும். குறிப்பாக, மக்கள் அதிகம் விரும்பும் ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஜீரா உப்பு பிஸ்கட், இனிப்பு குக்கீகள், ஈஸ்ட் புளிக்கவைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு ரொட்டி, கிரீம் பன், பழ ரஸ்க், பல்வேறு பப்ஸ் மற்றும் கேக் வகைகள் போன்றவற்றைத் தரமாகவும் சுவையாகவும் எப்படித் தயாரிப்பது என்பது குறித்து நிபுணர்கள் மூலம் நேரடி விளக்கம் அளிக்கப்படும்.

வெறும் தயாரிப்போடு நின்றுவிடாமல், உற்பத்தி செய்த பொருட்களை எப்படிச் சந்தைப்படுத்துவது , பேக்கிங் மற்றும் லேபிளிங் செய்வது எப்படி, பொருட்களுக்கான விலையை எவ்வாறு நிர்ணயம் செய்வது போன்ற வணிக நுணுக்கங்களும் இதில் சொல்லித் தரப்படும். அத்துடன், புதிய தொழில் தொடங்குபவர்களுக்குத் தமிழக அரசு வழங்கும் பல்வேறு நிதியுதவிகள், கடனுதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த விழிப்புணர்வும் முழுமையாக வழங்கப்படும்.

பேக்கரி தொழிலில் ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு முடித்த ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் தாராளமாகப் பங்கேற்கலாம். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயனாளிகளின் வசதிக்காகக் குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி வசதியும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8668102600 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் பார்வையிடலாம்.

SATHISH R

Recent Posts

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

14 seconds ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

1 minute ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

3 minutes ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

7 minutes ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

11 minutes ago

விபத்தா..? அப்படின்னா என்ன..? – மரண பயத்தை காட்டிய.. காரை அசால்ட்டாக நிறுத்திய மாஸ் சிறுவன்…! பாராட்டும் நெட்டிசென்கள்…!

மழைக்காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. அப்படி ஒரு வழுக்கலான மலைச்சரிவுச் சாலையில் கார் ஒன்று மேலே ஏற…

13 minutes ago