ரூ35 கோடி Vs ரூ50 கோடி..! தவெக, திமுக MLA-க்களுக்கு வலைவீச்சு…? தமிழக அரசியலை அதிரவைக்கும் பவர் பிளே…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை அவரது பதவியை ராஜினாமா செய்ய வைப்பதற்காக ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் 8 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்குப் போட்டியாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் தவெக தரப்பில் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஆளுநரிடம் மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இருதரப்புப் புகார்களின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அரசியல் வட்டாரங்களில் இது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தக் குதிரை பேரப் புகார்களின் பின்னணியாகத் தற்போதைய அரசியல் சூழலையே அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழகத்தில் அண்மையில் அமைந்த ‘மைனாரிட்டி’ அரசே இதுபோன்ற பலப்பரீட்சைகளுக்கும், குதிரை பேரப் புகார்களின் பிறப்பிடத்திற்கும் முதன்மைக் காரணம் என்று அவர்கள் கருதுகின்றனர். போதிய பெரும்பான்மை இல்லாத சூழலில், ஆட்சியைக் தக்கவைத்துக் கொள்ளவும் அல்லது அதைக் கவிழ்க்கவும் திரைமறைவு அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்திருப்பதை இந்தச் சம்பவங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

Swetha

Recent Posts

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

7 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

12 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

18 minutes ago

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

30 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

32 minutes ago