#image_title
பிரபல நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நேற்று கெருகம்பாக்கத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து தான் அவர்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
பிரபல நடிகர் அர்ஜுன் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார். அர்ஜுன் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐஸ்வர்யாவும் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் ஐஸ்வர்யா நடித்தார். இந்நிலையில் சின்னத்திரையில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடியனான தம்பி ராமையாவின் மகன் உமாபதி போட்டியாளராக பங்கேற்றார்.
அப்போது தந்தையை பார்க்க வந்த ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் இடையே நட்பு மலர்ந்து பின் காதலாக மாறியது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
இந்த திருமணத்தில் நடிகர் விஷால், விஜயகுமார், கே ஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா, உமாபதி திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#image_title
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…