EPS-இன் மௌனத்திற்கு பின்னால் இருக்கும் ரகசியம்… கேமராவிற்கு முன் திருமாவளவன் கொடுத்த அதிரடி பதில்…!

Spread the love

அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தொடர்ந்து இணைந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ள சூழலில், இது திட்டமிட்ட ‘குதிரை பேரம்’ என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த இக்கட்டான அரசியல் சூழலில், அதிமுக தலைமை ஆவேசமாகப் போர்க்கொடி தூக்காமல் அமைதியாக இருப்பதன் பின்னணி என்ன என்ற சந்தேகம் எழுவதாக திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தங்கள் கட்சி திட்டமிட்டுச் சிதைக்கப்படுவதை அதிமுக தலைமை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட திருமாவளவன், அவர்கள் வெறும் ஆளுநரிடம் புகார் மனு அளிப்பதை மட்டுமே தங்களது கடமையாகச் செய்து வருவதாக விமர்சித்தார். “எங்கள் கட்சியை அப்புறப்படுத்தப் பார்க்கிறார்கள்” என்று பொதுமக்களிடம் முறையிட அதிமுக ஏன் தயங்குகிறது என்றும் அவர் வினவியுள்ளார். மேலும், மாற்றுக்கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து செய்தியாளர்கள் தவெக தலைமையிடமே நேரடியாகக் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும், இதில் குதிரை பேரம் நடந்திருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆளுநர் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிமுகவிலிருந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-வில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகியது குறித்த கேள்விக்கு, அவர் எதற்காக விலகினார் என்பதை அவரிடமே நேரடியாகக் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று திருமாவளவன் பதிலளித்தார். தவெக-வின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிராக அதிமுக தலைமை தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களையும் யூகங்களையும் கிளப்பியுள்ளது.

SATHISH R

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

4 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

4 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

4 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

4 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

4 மணத்தியாலங்கள் ago