Categories: சினிமா

காதலிக்கும் போது மயக்குற மாதிரி பேசுவாங்க.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம்..? Love Marriage பற்றி சரண்யா பளிச்..!!!

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் காதல் திருமணம் பற்றி சரண்யா பொன்வண்ணன் பேசியுள்ள ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது காதலிக்கும் போது அடிக்கடி வெளியில் கூட்டி செல்வது, நிறைய பொருட்கள் வாங்கி தருவது, இனிமையாக பேசுவது, நம்மைக் கவரும் வகையிலான பல வார்த்தைகளை பயன்படுத்துவது என ஆண்கள் இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு இவள் என்னுடையவள் என அறிந்த ஆண்கள் அடுத்ததாக குழந்தை மற்றும் தொழில் என தன்னுடைய குடும்பத்தை கவனிப்பதில் தங்களது ஆர்வத்தை காட்டுவார்கள்.

இது போன்ற நேரங்களில் காதலிக்கும் போது எப்படி இருந்தார்களோ அது போன்று மனைவியிடம் இருக்கும் எண்ணம் வராது. இதன் பின்னால் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்ற காரணம் மட்டுமே இருப்பதால் இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் காதலிக்கும் போது இருந்த உலகம் வேறு திருமணத்திற்கு பிறகு இருக்கும் உலகம் வேறு. அதாவது ஒரு குறிப்பிட்ட வயதில் நாம் ஒவ்வொன்றுக்கும் ஆசைப்படுவோம். அதனைப் போல தான் இதுவும். வாழ்க்கைக்கு ஏற்றது போல ஒவ்வொரு சூழ்நிலையையும் புரிந்து வாழ்ந்தால் கணவன் மனைவிக்குள் எந்த சண்டையும் வராது. இப்படி புரிந்து கொண்டால் காதல் திருமணம் செய்து கொண்டவர்களும் எந்தவித சண்டையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும் என சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

 

Nanthini

Recent Posts

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

9 minutes ago

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

20 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

29 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

34 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

44 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

56 minutes ago