திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

Spread the love

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் அரசியல் எதிர்காலம் இப்போது பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உருவான அதிருப்தி அலையைத் தொடர்ந்து, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினர். ஆனால், தங்களை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விடுவதா அல்லது ரிஸ்க் எடுத்து மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் தருவதா என்ற தர்மசங்கடத்தில் தவெக தலைமை தற்போது கையை பிசைந்து கொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடியின் உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது ஒட்டுமொத்த அரசியலையும் உலுக்கியது. இதில் 21 பேர் பின்னர் எடப்பாடியிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து தங்களது தகுதிநீக்க நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், பதவிகளை ராஜினாமா செய்த இந்த 4 பேரின் நிலைமைதான் இப்போது பரிதாபமாக மாறியுள்ளது. தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகள் கடைசி வரை தங்களோடு பயணிக்குமா என்ற சந்தேகத்தில், அதிமுக அதிருப்தியாளர்களை தன்பக்கம் இழுக்க தவெக மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவே இந்த அதிரடி ராஜினமாக்கள் ஆகும்.

தொகுதியில் எடுக்கப்படும் ரகசிய சர்வேயின் அடிப்படையில் மட்டுமே மீண்டும் போட்டியிட சீட் வழங்கப்படும் என்பதில் முதல்வர் விஜய் ஆரம்பத்திலிருந்தே கறாராக இருந்துள்ளார். ஆனால், தவெகவின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் கொடுத்த அதீத வாக்குறுதிகளை நம்பியே இந்த 4 பேரும் பதவிகளை துறந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைமை நடத்திய ரகசிய சர்வேயில், ராஜினாமா செய்த 4 பேருக்குமே பொதுமக்களிடம் நல்ல பெயர் இல்லை என்றும், மீண்டும் அவர்களுக்கே சீட் கொடுத்தால் தவெக தோல்வியைத் தழுவ நேரிடும் என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஷாக்கிங் ரிப்போர்ட் காரணமாக அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க முதல்வர் விஜய் முற்றிலும் தயக்கம் காட்டி வருகிறார். அதேநேரம், தங்களை நம்பி வந்தவர்களை அப்படியே கைவிட விரும்பாமல், அவர்களுக்குப் பதிலாக வாரியத் தலைவர் பதவிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துகொள்ளுமாறு தவெக தலைமை தூது அனுப்பியுள்ளது. “ஏன் தான் அதிமுகவை விட்டுவிட்டு வந்தோமோ?” என்று இந்த 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் நொந்து போய் கிடக்க, தங்களை அழைத்து வந்த தவெக அமைச்சர்களிடம் “எங்களை ஏமாற்றிவிட்டீர்களே” என அவர்கள் புலம்பி வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

5 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

13 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து… CM விஜய்யின் குடும்ப ரகசியத்தை பொதுவெளியில் போட்டுடைத்த உதயநிதி.. பதறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் எப்போதுமே குடும்ப பின்னணி சார்ந்த விமர்சனங்கள் காரசாரமான விவாதங்களை கிளப்பும் நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் மற்றும்…

20 minutes ago

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

30 minutes ago

ரேஷன் கார்டு இனி ATM கார்டு போல மாறப்போகுது… ரேஷன் கடையில இந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…

37 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

43 minutes ago