சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் சில முக்கிய மக்கள் நலத்திட்டங்களை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது; குறிப்பாக, குடும்பத்தலைவிகளுக்கான மாதாந்திர மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவது மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மகளிருக்கும் அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதியை விரிவாக்கம் செய்வது போன்ற முக்கிய வாக்குறுதிகள் இன்றைய உரையில் இடம்பெறும் என பெண்கள் ஆவலோடு காத்திருந்தனர்.
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இன்றைய உரையில் மகளிர் நலன் சார்ந்த எந்தவொரு புதிய அறிவிப்புகளையும் முதல்வர் விஜய் வெளியிடாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்களும் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…