“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

Spread the love

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல் பறந்து வருகிறது. ஜூன் 18ஆம் தேதி தொடங்கிய இக்கூட்டத்தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். அப்போது ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதங்களும், அரசியல் மோதல்களும் அரங்கேறின.

விவாதத்தின் போது முதல்வர் விஜய் பேசிய ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற வார்த்தை சபையில் பெரும் புயலைக் கிளப்பியது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், தவெக அரசுக்கு எதிராக முழக்கமிட்டு சட்டசபையிலிருந்து மொத்தமாக வெளிநடப்பு செய்தனர். திமுகவினர் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து, அவையில் இல்லாதவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை என்று குறிப்பிட்ட முதல்வர் விஜய், எதிர்க்கட்சியினரின் “சோஃபா மாடல் ஆட்சி” என்ற விமர்சனத்திற்கு, “ஃபர்னிச்சர் தொழிலை வேறு எங்காவது சென்று செய்யச் சொல்லுங்கள்” என்று அதிரடியாகப் பதிலடி கொடுத்தார்.

மேலும், திமுகவினரின் வெளிநடப்பைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தன் பாணியில் ஒரு குட்டிக்கதையைக் கூறி முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரடியாகவே நக்கல் செய்தார். “ஒரு ஊரில் ஒரு பெரியவர் வெயில் அதிகமாக இருக்கிறது என்று கண்ணுக்கு மேல் கை வைத்துத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு சின்னப் பையன் என்ன தேடுகிறீர்கள் எனக் கேட்க, அதற்கு அந்தப் பெரியவர் ‘உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.. ஆனா உங்க அப்பாவைக் காணோமே’ என்று கூறினாராம்” என ஸ்டாலினின் உடல்மொழியை ஆக்ஷன் செய்து காட்டி விஜய் பேசினார். கதையை முடித்துவிட்டு, “எங்களுக்கும் நக்கலாக, நய்யாண்டியாகப் பேசத் தெரியும்” என்றும் சவால் விட்டார்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால்தான் ஊழல் செய்ய முடியும் என்றும், தூய்மையான தவெக அரசால் மட்டுமே கூட்டணி ஆட்சிக்கு வழிவகுக்க முடியும் என்றும் முதல்வர் விஜய் பெருமிதத்துடன் பேசினார். அத்துடன், “ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் (ஸ்டாலினின் தொகுதி) இந்த ஆட்டம் ஆடிவிட்டது” என்று குறிப்பிட்டு, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை அவர் நேரடியாகவே சாடியுள்ளார். தவெக மற்றும் திமுக இடையேயான இந்த நேரடி அரசியல் மோதல் தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

வெறும் 2 நிமிடம் தாமதம்… பெற்ற தாயின் உயிரையே குடித்த பாவி மகன்…. ஆந்திராவில் அரங்கேறிய பதறவைக்கும் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பிதாபுரத்தில், குடிக்கத் தண்ணீர் கொண்டு வரச் சற்றுத் தாமதமானதால் பெற்ற தாயையே மகன்…

2 minutes ago

ரேஷன் கார்டு இனி ATM கார்டு போல மாறப்போகுது… ரேஷன் கடையில இந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…!

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்…

9 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500… CM விஜய் கொடுத்த ஷாக்…. ஏமாந்த தமிழக பெண்கள்…. ஒரே ஒரு அறிவிப்பு கூட இல்லையா….?

சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…

15 minutes ago

“திமுக கூட்டணி, எடப்பாடிக்கு அதிர்ச்சி, இப்போது 5 பேருக்கு ஆப்பு”…. தமிழக அரசியலை உலுக்கும் விஜய்யின் மூவ்….!

தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…

26 minutes ago

“அமைச்சர் பதவி காலி”…. திடீரென ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் ஜார்ஜ் குரியன்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…

37 minutes ago

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

46 minutes ago