தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் பார்க்கிங். இந்த திரைப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் எம் எஸ் பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய மனைவிக்காக ஒரு புதிய காரை வாங்கும் நிலையில் எம் எஸ் பாஸ்கர் தன்னுடைய காரை நிறுத்துமிடத்தில் ஹரிஷ் கல்யாண் காரை நிறுத்தியதால் பிரச்சனை தொடங்குகிறது.
கார் வைத்திருக்கும் பலரும் தங்களது வாழ்வில் சந்திக்கும் சராசரி ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் சுமார் 45 முதல் 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
அதனைப் போலவே தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது. நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அன்னபூரணி திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் சுமார் 80 லட்சம் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உணவு என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…