முன்னாள் மனைவியின் படம் குறித்து தனுஷ் வெளியிட்ட பதிவு… என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.  தற்பொழுது தனுஷ் தமிழில் தனது 50 வது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘D50’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வடசென்னை 2’, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதை தொடர்ந்து இந்தியில் பிரபல திரைப்படமான ‘ராஞ்சனா’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் தனுஷ்.

‘தேரே இஷ்க் மெய்ன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடதக்கது. தற்பொழுது தனுஷ் தமிழில் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்தது வாழ்வது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் படம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் தனுஷ் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘3 படத்தின் ரீ-ரிலீஸுக்கு கிடைக்கும் வரவேற்பு எமோஷனலாக உள்ளது. இந்த ஏகோபித்த வரவேற்புக்கு கோடான கோடி நன்றி’ என்று அவர் பதிவு செய்துள்ளார். தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘3’ . இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘3’ திரைப்படம் சமீபத்தில் ரீரிலீஸ் ஆன நிலையில் இந்த படத்திற்கு புது படங்களுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் நடிகர் தனுஷ் நன்றி கூறி வெளியிட்ட பதிவானது ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

Begam

Recent Posts

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

4 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

13 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

22 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

32 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

42 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

47 minutes ago