கடந்த பல ஆண்டுகளாக நடிகை நமீதா சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார். பாஜகவிலும் முக்கிய பொறுப்பில் நமீதா இருந்து வருகிறார். இந்நிலையில் தேனியில் நடந்த ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை நமீதா சில தினங்களுக்கு முன்பு கலந்து கொண்டார். அப்போது நமீதா கூறியதாவது, மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதற்கு எனக்கு விருப்பம் தான். ஆனால் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் போல காலம் கடந்தும் நம்மைப் பற்றி பேச வைக்கும் படமாக, கேரக்டராக அது இருக்க வேண்டும்.
பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ராதிகா ஆப்தே போன்றவர்கள் அருமையான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு அதுபோன்ற சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை நமீதா கூறியிருக்கிறார்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (30) என்ற மெடிக்கல் ரெப், தனது வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் கேரளாவைச்…
சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சிவப்பு நிறப் பெட்டியொன்றிலிருந்து ரத்தம் கசிவதையும், துர்நாற்றம் வீசுவதையும்…
கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிந்து மாணவர்கள் வீடு…
கோவையில் போலி அதிகாரப் பத்திரம் மூலம் நிலத்தை விற்பதாகக் கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்ட…
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு அருகேயுள்ள ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று…