அடச்சீ… அவனை சும்மாவே விட கூடாது… 10 ரூபாய் கொடுத்து… 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… 5 ஆண்டுகளுக்குப் பின்… கூண்டில் நின்ற காம கொடூரன்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் தஹானு அருகேயுள்ள ரான்ஷெட் வங்காட்பாடா கிராமத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கடைக்குச் சென்ற 9 வயது சிறுமியை, 51 வயதான பிரமோத் ரத்ன கோஷே என்பவர் ரூ.10 நாணயம் கொடுத்து ஆசை காட்டி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமி அலறிக்கொண்டு தப்ப முயன்றபோது, அவரைக் கொடூரமாகப் பின்தொடர்ந்து சென்று அரிவாளால் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட 20 இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். தடுக்க முயன்ற வழிப்போக்கர் ஒருவரையும் அவர் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நிலையில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வழக்கில் அரசுத் தரப்பில் 24 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், காயமடைந்த வழிப்போக்கரின் வாக்குமூலமும், புதரில் இருந்து மீட்கப்பட்ட அரிவாளும் முக்கிய ஆதாரங்களாக அமைந்தன. மேலும், தடயவியல் பரிசோதனையில் சிறுமியிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் சிறுமி மற்றும் குற்றவாளியின் டிஎன்ஏ அடங்கிய கலப்பு டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது. ஆபாசக் காணொளிகள் பார்த்த நேரத்தை துல்லியமாக நிரூபிக்க முடியாததால் போக்சோ பிரிவு 12-ல் இருந்து விடுவிக்கப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள் வலுவாக நிரூபிக்கப்பட்டன.

வழக்கை விசாரித்த தஹானு கூடுதல் அமர்வு நீதிபதி ஏ.ஆர். ரஹானே, இக்கொடூர சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாகக் கூறி குற்றவாளி பிரமோத் ரத்ன கோஷேவுக்கு மரண தண்டனையும், ரூ.75,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Swetha

Recent Posts

மக்களே உஷார்… ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா?… நாளைக்குள் இதை செய்யலைனா ரேஷன் பொருட்கள் கிடைக்காதா?… அரசின் அதிரடி எச்சரிக்கை…!

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் பயோமெட்ரிக் பதிவு செய்வதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாவட்டத்தில்…

17 minutes ago

ஐயோ… “யார் அந்த எட்டப்பர்கள்?”…. முதல்வர் விஜய் கூட்டத்தைப் புறக்கணித்து… கனிமொழி எம்பி கிளப்பிய புயல்… அரசியலில் பரபரப்பு…!

சென்னையில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது.…

25 minutes ago

ஷாக்… தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர்களுக்கு… பவர்ஃபுல் பொறுப்பு… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!

அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர்…

35 minutes ago

ஐயோ ரத்தம்..! கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்… நடுங்க வைக்கும் பரபரப்பு வீடியோ…!!

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சிவப்பு நிறப் பெட்டியொன்றிலிருந்து ரத்தம் கசிவதையும், துர்நாற்றம் வீசுவதையும்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… சுதந்திர தின ஒத்திகையில் கொடூரம்… 2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… கொதித்தெழுந்த நெட்டிசென்கள்…!

கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிந்து மாணவர்கள் வீடு…

1 மணத்தியாலம் ago