ஐயோ ரத்தம்..! கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ்…சென்ட்ரல் சிசிடிவியில் சிக்கிய கொலையாளிகள்… நடுங்க வைக்கும் பரபரப்பு வீடியோ…!!

Spread the love

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சிவப்பு நிறப் பெட்டியொன்றிலிருந்து ரத்தம் கசிவதையும், துர்நாற்றம் வீசுவதையும் பயணிகள் உணர்ந்தனர். அவர்களின் தகவலின்பேரில், ஆக்ரா ரயில் நிலையத்தில் அந்தப் பெட்டியை மீட்ட காவல் துறையினர் அதனைத் திறந்து பார்த்தனர். அதனுள் பிளாஸ்டிக் உறைகளால் சுற்றப்பட்டு, கொடூரமாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆணின் உடல் பாகங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மீட்கப்பட்ட அந்தப் பெட்டிக்குள் சென்னையைச் சேர்ந்த பிரபல துணிக்கடை ஒன்றின் பைகளும், சில ரசீதுகளும் சிக்கியதால், கொலை சென்னையில் அரங்கேறியிருக்கலாம் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்தனர். இந்தத் தடயங்களை வைத்து, உத்தரப் பிரதேச ரயில்வே காவல் துறையினர் தமிழக போலீசாருடன் இணைந்து தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், சென்னையில் சமீபத்தில் மாயமான நபர்கள் குறித்த விவரங்கள் மற்றும் கொலை வழக்குகளை அடிப்படையாகக் கொண்டும் ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டன.

விசாரணையின் முக்கியக் கட்டமாக, சென்னை சென்ட்ரல், பார்க் மற்றும் தாம்பரம் வரையிலான ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறையினர் அலசி ஆராய்ந்தனர். அப்போது, ஆணும் பெண்ணும் இணைந்து அந்தப் பெட்டியை ரயிலில் வைத்துவிட்டு, ரயில் புறப்படும் முன்பே இறங்கிச் செல்வது பதிவாகியிருந்தது. தொடர்ந்து அவர்கள் பார்க் நிலையத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில் தப்பிச் சென்றதை உறுதி செய்துள்ள போலீசார், குற்றவாளிகள் எங்கு இறங்கினார்கள் என்பதையும், கொல்லப்பட்ட நபரின் விவரங்களையும் கண்டறியும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Gayathri

Recent Posts

முடிவுக்கு வராத கொடூரம்… ஜெம் வீரமணி மீது பாய்ந்த 8-வது வழக்கு… சிறைக்குள்ளும் குறையாத சிக்கல்… வெளியான பகீர் வாக்குமூலம்…!!

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…

8 மணத்தியாலங்கள் ago

பலே கில்லாடி!.. ரூ.37 லட்சம் கள்ள நோட்டு… கலர் ஜெராக்ஸா? ஒரிஜினலா?… போலீசையே ஆச்சரியப்படுத்திய மிஷின் வித்தை… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago

சட்டம் ஒருவருக்கு ஒரு நீதியா?… நீதிபதி மகனின் வேட்டை… தூக்கி வீசப்பட்ட முதியவர்… நள்ளிரவில் பறிபோன அப்பாவி உயிர்… அடுத்து நடக்கப்போவது என்ன?…!!

கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…

8 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! புருஷன் கூட இல்லைனு அசிங்கப்படுத்துனாங்க… வாடகை வீட்டில் நடந்த அநியாயம்… சின்மயி உடைத்த ரகசிய வேதனை…!!

திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…

9 மணத்தியாலங்கள் ago

அடபாவேமே..! “அவள விட குறைவா எடுத்தியே…” பெற்றோரின் வார்த்தை… ஒரே வகுப்பில் இரட்டை சகோதரிகள்… 10-ம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய…

9 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… திக்… நிலத்தகராறில் வெடித்த கொடூரம்… நடுரோட்டில் குண்டுவீசி, துப்பாக்கிச் சூடு நடத்திய முகமூடி கும்பல்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…

9 மணத்தியாலங்கள் ago