சென்னை திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள்களான பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் 15 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் ஆவர். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தனர்.
பள்ளி முடிந்து இருவரும் வீட்டிற்குத் திரும்பிய நிலையில், பிரியங்கா உடை மாற்றுவதாகக் கூறி அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்து பார்த்தபோது, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாகத் தகவலறிந்து வந்த திருவேற்காடு காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இரட்டைச் சகோதரிகளில் ஒருவரான பிரியதர்ஷினி அதிக மதிப்பெண்களும், பிரியங்கா குறைந்த மதிப்பெண்களும் பெற்று வந்ததாகத் தெரிகிறது. இதனால் பெற்றோர் பிரியங்காவை நன்றாகப் படிக்குமாறு அறிவுறுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் பேரில் தமிழ்நாடு…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாடகை செலுத்த முடியாத நிலையில் இருந்த நபர் ஒருவர், ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
கேரள மாநிலம் கொச்சி சேரநல்லூர் பகுதியில், கூடுதல் அமர்வு நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ்…
திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, தான் திரையுலகில் பிரபலமாவதற்கு முன்பு தன் தாயாருடன் சேர்ந்து வாடகை வீடு தேடிய தருணங்களில்…
பீகார் மாநிலம் கயாவில் உள்ள சந்தௌதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில், நிலத்தகராறு காரணமாக பெரும் கலவரம்…
பாரிஸில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களின் போது, ரூ டி லா ரிபப்ளிக் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று பயங்கர…