‘அண்டப்புளுகு ஆகசப்புளுகு’…. “ரூ. 6,000 செருப்பு… முதியோர் இல்ல நாடகம்”… நடிகர் மோகன் சர்மாவின் முகத்திரையைக் கிழித்த குட்டி பத்மினி…. வெளிவந்த பகீர் உண்மை….!

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்த மூத்த நடிகர் மோகன் சர்மா, சமீபத்தில் தான் கடும் பண நெருக்கடியில் இருப்பதாகவும், மருத்துவச் செலவுக்குக்கூட வழியின்றி முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பதாகவும் கண்ணீருடன் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போயஸ் கார்டனில் வாழ்ந்த தமக்கு தென்னிந்திய பிலிம் சேம்பர் உள்ளிட்ட அமைப்புகள் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். திரையுலகினரையும் ரசிகர்களையும் பரிதாபப்பட வைத்த இந்த பேட்டி, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது.

இருப்பினும், மோகன் சர்மாவின் இந்த புகார்கள் அனைத்தும் முற்றிலும் அண்டப்புளுகு மற்றும் நாடகம் என்று பிரபல நடிகை குட்டி பத்மினி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய பிலிம் சேம்பர் கடந்த ஆண்டே அவருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியதைச் சுட்டிக்காட்டிய அவர், பணத்தைப் பெற்றுக்கொண்டு யாருமே உதவவில்லை எனப் பொய் பேசுவது நியாயமற்றது என்றார். மேலும், போயஸ் கார்டன் வீடு நடிகை லஷ்மி தனது சொந்த உழைப்பில் சேர்த்த ₹5 லட்சத்தைக் கொடுத்து வாங்கச் சொன்னது என்றும், அதை மோகன் சர்மா ஏமாற்றித் தன் பெயரிலேயே பதிந்துகொண்டார் என்றும் குட்டி பத்மினி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மோகன் சர்மாவின் திருமண வாழ்க்கைப் பின்னணி குறித்தும் அடுக்கடுக்கான புகார்களைக் குட்டி பத்மினி முன்வைத்துள்ளார். நடிகை லஷ்மியைப் பிரிந்த பிறகு இரண்டாவதாக ஒருவரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற மோகன் சர்மா, மூன்றாவதாக சாந்தி என்ற பரதநாட்டியக் கலைஞரை மணந்தார். அவரையும் பணத்திற்காகச் சித்ரவதை செய்து அடித்து விரட்டியதாகக் கூறிய குட்டி பத்மினி, இவ்வாறு மூன்று பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து ஏமாற்றியவர் தான் இந்த மோகன் சர்மா என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

சாப்பாட்டுக்கே வழியில்லை என்று கூறும் மோகன் சர்மா, தற்சமயம் ரூ.6,000 மதிப்பிலான செருப்பை அணிந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய குட்டி பத்மினி, இவ்வளவு ஆடம்பரமாக இருக்கும் ஒருவர் எதற்காக இப்படி வறுமை நாடகம் ஆடுகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மூன்று பெண்களின் வாழ்க்கையை அழித்த பாவமும், அவர்களின் கண்ணீரும் அவரை சும்மா விடாது என்றும், அந்தத் தெய்வமே நின்று கொல்லும் என்றும் தனது வீடியோவில் ஆக்ரோஷமாகப் பேசி திரையுலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளார்.

Nanthini

Recent Posts

“பங்களாவிற்குள் எலும்புக்கூடு…” பெங்களூரில் ஓராண்டாக யாருக்கும் தெரியாமல் நடந்த சோகம்…! கணவர், மகன் இல்லாமல் வாட்டிய கொடுமை…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பகலகுண்டே பகுதிக்கு உட்பட்ட ஹவாநூர் லே-அவுட்டில் உள்ள ஒரு மாடி வீட்டில், தாட்சாயிணி (52) என்ற…

3 minutes ago

“எனக்கு பணம் தான் முக்கியம்”… வங்கி கணக்கை வாடகைக்கு கொடுத்து…. 25 வயது வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமிஷன் ஆசைக்காக வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு, ஆன்லைன் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பிய…

6 minutes ago

BREAKING: “ரூ.2 கோடி கடன்… பவுன்ஸ் ஆன செக்”…. நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் திடீர் சம்மன்…!

நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பெற்ற ரூ.2 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கிய…

11 minutes ago

“ஸ்கூல்ல அவமானப்படுத்திட்டாங்க.. எல்லாரும் என்ன பார்த்து சிரிக்கிறாங்க…” 15 வயது மாணவரின் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஜூனியர் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த அரவிந்த் (15) என்ற…

14 minutes ago

“காலால் எட்டி உதைத்து முகத்தில் கொடூரமாக தாக்கி…” அலறிய பெண்ணை விடாமல் அடித்த வாலிபர்…. உறைய வைக்கும் வீடியோ வைரல்…!!

இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும்…

28 minutes ago