நள்ளிரவில் பயங்கரம்… முகம் மூடி ஓட்டம்…. குழந்தையைக் கடத்திய பெண்ணின் பகீர் CCTV வீடியோ…. கடைசி நிமிட டுவிஸ்ட்….!

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில், சக தொழிலாளியின் குழந்தையைக் கடத்த முயன்ற பெண் ஒருவரை காவல்துறையினர் ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர். ஜபல்பூருக்குக் கூலி வேலைக்காக வந்த மண்டலா மாவட்டத்தைச் சேர்ந்த அப்பெண், அங்கு மற்றொரு பெண் தொழிலாளியுடன் நட்பு வளர்த்துக் கொண்டுள்ளார். பின்னர், அவர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல் கடத்திச் சென்றுள்ளார்.

குழந்தையைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கௌரிகாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அப்பெண் தன் முகத்தை மூடியபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சமூக வலைதளங்களிலும் வைரலான இந்தச் சிசிடிவி பதிவை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கடத்தப்பட்ட குழந்தையை அப்பெண் ரயில் மூலம் தனது சொந்த ஊரான மண்டலாவுக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக ஜபல்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட காவல்துறையினர், அப்பெண் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே அவரை மடக்கிப் பிடித்து குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். ஜபல்பூர் நகரக் காவல் கண்காணிப்பாளர் எம்.டி. நகோதியா தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு குழந்தையைக் மீட்ட காவல்துறையினரை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்துத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Nanthini

Recent Posts

“பங்களாவிற்குள் எலும்புக்கூடு…” பெங்களூரில் ஓராண்டாக யாருக்கும் தெரியாமல் நடந்த சோகம்…! கணவர், மகன் இல்லாமல் வாட்டிய கொடுமை…. பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பகலகுண்டே பகுதிக்கு உட்பட்ட ஹவாநூர் லே-அவுட்டில் உள்ள ஒரு மாடி வீட்டில், தாட்சாயிணி (52) என்ற…

2 minutes ago

“எனக்கு பணம் தான் முக்கியம்”… வங்கி கணக்கை வாடகைக்கு கொடுத்து…. 25 வயது வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமிஷன் ஆசைக்காக வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு, ஆன்லைன் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பிய…

5 minutes ago

BREAKING: “ரூ.2 கோடி கடன்… பவுன்ஸ் ஆன செக்”…. நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் திடீர் சம்மன்…!

நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா என்பவரிடம் பெற்ற ரூ.2 கோடி கடனைத் திருப்பிச் செலுத்த வழங்கிய…

10 minutes ago

“ஸ்கூல்ல அவமானப்படுத்திட்டாங்க.. எல்லாரும் என்ன பார்த்து சிரிக்கிறாங்க…” 15 வயது மாணவரின் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீ சைதன்யா ஜூனியர் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்த அரவிந்த் (15) என்ற…

13 minutes ago

“காலால் எட்டி உதைத்து முகத்தில் கொடூரமாக தாக்கி…” அலறிய பெண்ணை விடாமல் அடித்த வாலிபர்…. உறைய வைக்கும் வீடியோ வைரல்…!!

இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணை மிகக் கொடூரமான முறையில் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும்…

27 minutes ago