“5.60 லட்சம் கடன்”…. நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கடன் காரன்…. மனைவியை பார்க்க கூடாத நிலையில் பார்த்த கணவன்…. சேலத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்….!

Spread the love

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தனது நிலத்தை அடமானம் வைத்து, அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ராஜேந்திரன் என்பவரிடம் 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு வைகுந்தம் டோல்கேட் அருகே ஹோட்டல் நடத்தி வந்த காளீஸ்வரி, முதல் மாத வட்டியைச் சரியாகச் செலுத்தியுள்ளார். இருப்பினும், அடுத்த மாதத்திற்கான வட்டியைக் கேட்கும் போது ஹோட்டல் தொழில் மந்தமாக உள்ளதால் உடனடியாகப் பணம் தர இயலவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ராஜேந்திரன், காளீஸ்வரியின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தனது ஆசைக்கு இணங்குமாறு தொடர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், காளீஸ்வரியின் கணவர் இல்லாத நேரத்தைப் பார்த்து அவரது வீட்டிற்குச் சென்ற ராஜேந்திரன், அங்கு அவரைப் பலவந்தப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக காளீஸ்வரியின் கணவர் வீடு திரும்பியதைக் கண்டு பீதியடைந்த ராஜேந்திரன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

நடந்த விவரங்களை அறிந்த கணவர் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திரன் ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் கொடுத்த நபர் பணத்திற்குப் பதிலாகப் பெண்ணைக் குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்த இந்தக் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அடடே… டொராண்டோவில் பாத்திரம் கழுவ எவ்ளோ தருவாங்க?… கிண்டல் கேள்விக்கு சாதுரிய… மாஸ் பதிலடி கொடுத்த இந்தியப் பெண்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!

கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…

12 minutes ago

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!…’நாம் தமிழர்’ பின்னடைவு குறித்து உருக்கமான பேச்சு…மேடையில் வெடித்த சீமான் கோபம்…!!

திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…

15 minutes ago

அடச்சீ… ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… அலறல் சத்தம்… விழித்துக்கொண்ட ஊழியர்கள்… கொல்கத்தாவில் பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…

31 minutes ago

“போடா டேய் பைத்தியக்காரா… அப்படியே கிழிச்சிட்டாலும்”…. வம்புக்கிழுத்த கூல் சுரேஷ்… கிழித்துதொங்கவிட்ட சீமான்….!

தமிழக அரசியலில் அண்மைக் காலமாக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும்…

40 minutes ago

எம்பிக்களை கைக்குள் போட பிளான்?…. விஜய் கூட்டிய கூட்டத்துக்கு பின்னால் இப்படி திட்டம் இருக்கா?….. கிழித்து தொங்கவிட்ட தராசு ஷ்யாம்….!

மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…

52 minutes ago