“எனக்கு பணம் தான் முக்கியம்”… வங்கி கணக்கை வாடகைக்கு கொடுத்து…. 25 வயது வாலிபர் செய்த அதிர்ச்சி செயல்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமிஷன் ஆசைக்காக வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு, ஆன்லைன் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பிய நபரை சைபர் கிரைம் உதவியுடன் கேணிக்கரை போலீசார் கைது செய்துள்ளனர். மாவட்டத்தில் இதுபோன்ற இணையவழி குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், மோசடி கும்பல்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க சாமானியர்களின் வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாங்கி முறைகேடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க காவல் துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னை இணையவழி குற்றப்பிரிவு போலீசார் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின்பேரில் கேணிக்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராமத்தில் இயங்கி வரும் வங்கி கிளையின் கணக்கு ஒன்றில், ஆன்லைன் மோசடி மூலம் பெறப்பட்ட சட்டவிரோத பணம் பெருமளவில் பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கணக்கின் மூலம் பெறப்பட்ட பணம் உடனடியாக கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு மோசடி கும்பலுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், அந்த வங்கி கணக்கு சாத்தான்குளத்தைச் சேர்ந்த தனசேகரன் (25) என்பவருக்குச் சொந்தமானது என உறுதியானது. ஆன்லைன் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றித் தருவதற்காக பெருந்தொகையைக் கமிஷனாகப் பெற்று, அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட தனசேகரனைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை வரும் 19-ஆம் தேதி வரை காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

Nanthini

Recent Posts

அடடே… டொராண்டோவில் பாத்திரம் கழுவ எவ்ளோ தருவாங்க?… கிண்டல் கேள்விக்கு சாதுரிய… மாஸ் பதிலடி கொடுத்த இந்தியப் பெண்… இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ…!

கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…

7 minutes ago

எங்களை ரோட்ல நிறுத்திட்டீங்க!…’நாம் தமிழர்’ பின்னடைவு குறித்து உருக்கமான பேச்சு…மேடையில் வெடித்த சீமான் கோபம்…!!

திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…

9 minutes ago

அடச்சீ… ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்… அலறல் சத்தம்… விழித்துக்கொண்ட ஊழியர்கள்… கொல்கத்தாவில் பரபரப்பு…!!

மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…

26 minutes ago

“போடா டேய் பைத்தியக்காரா… அப்படியே கிழிச்சிட்டாலும்”…. வம்புக்கிழுத்த கூல் சுரேஷ்… கிழித்துதொங்கவிட்ட சீமான்….!

தமிழக அரசியலில் அண்மைக் காலமாக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும்…

35 minutes ago

எம்பிக்களை கைக்குள் போட பிளான்?…. விஜய் கூட்டிய கூட்டத்துக்கு பின்னால் இப்படி திட்டம் இருக்கா?….. கிழித்து தொங்கவிட்ட தராசு ஷ்யாம்….!

மேகதாது மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மட்டுமே காரணமாகக் காட்டி, விவசாய அமைப்புகளையும் அனைத்துக்…

47 minutes ago