திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள கருப்பனூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது கணவர் அண்ணாதுரை இருபது ஆண்டுகளுக்கு முன்பே காலமான நிலையில், இவர் பூ விற்று தனது மகன் சத்தியமூர்த்தி மற்றும் ஒரு மகளை வளர்த்து வந்துள்ளார். மகளுக்கு திருமணமாகி தருமபுரியில் வசித்து வரும் நிலையில், மகன் சென்னையில் உள்ள பானிபூரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கஸ்தூரிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்த அவரது மகன், தாய் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என பலமுறை கண்டித்துள்ளார்.
மகனின் அறிவுரையைக் கேட்காமல் கஸ்தூரி தொடர்ந்து அந்த நபருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, நேற்று சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த அவர், தனது தாய் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து கஸ்தூரியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், டி.எஸ்.பி. முரளி தலைமையிலான ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாயைக் கொலை செய்துவிட்டு தப்பியோடாமல் வீட்டின் அருகிலேயே அமர்ந்திருந்த சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பெற்ற தாயையே மகன் கட்டையால் அடித்துக் கொன்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தவர்களைப் பற்றிய ரகசியங்களை அறிந்துகொள்வதிலும், அதனை கிசுகிசுவாகப் பேசுவதிலும் மனிதர்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஆர்வம் உண்டு. நாமெல்லாம் இதுபோன்ற…
உதயநிதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக மூத்த தலைவர்களான சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கடிந்து கொண்டதாகத்…
கனடாவின் டொராண்டோ நகரில் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரேச்சல் என்ற இந்தியப் பெண்ணுக்குச் சமூக…
திரைத்துறையில் இயக்குநராகத் தடம் பதித்து, பின்னர் மாற்று அரசியல் முழக்கத்தோடு 'நாம் தமிழர்' கட்சியை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கியவர்…
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்வர் ராவ் என்பவரது மனைவி பவானி, கூரியர் நிறுவன ஊழியரான சைதுலு என்பவருடன்…
மேற்கு வங்காளத்தில் ஓடும் ரெயிலில் பயணித்த இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரை, ரெயில் கால்சினி நகரம் அருகே வந்தபோது ஆளில்லாத…