உதயநிதி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக மூத்த தலைவர்களான சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோரை மு.க.ஸ்டாலின் கடுமையாகக் கடிந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதியை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்ற காவல் வேனில் அமைச்சர்கள் உடன் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டாலின், “உங்களை அந்த வேனில் யார் போகச் சொன்னது? அதற்குப் பதிலாகத் தலைநகர் சென்னையில் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டாமா?” என்று தனது அதிருப்தியைக் காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் இந்தக் கோபத்தைத் தொடர்ந்து, சென்னை திரும்பிய மூத்த தலைவர்கள் உடனடியாக உதயநிதியுடன் சென்று மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் தலைவர்கள் களத்தில் இறங்கிப் போராடாமல் வேனில் சென்றது குறித்து சுட்டிக்காட்டியுள்ளது, திமுக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர்…
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (30) என்ற மெடிக்கல் ரெப், தனது வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கும் கேரளாவைச்…
சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கிப் பயணித்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சிவப்பு நிறப் பெட்டியொன்றிலிருந்து ரத்தம் கசிவதையும், துர்நாற்றம் வீசுவதையும்…
கடலூர் மாவட்டம் சாத்திப்பட்டில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சுதந்திர தின ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிந்து மாணவர்கள் வீடு…
கோவையில் போலி அதிகாரப் பத்திரம் மூலம் நிலத்தை விற்பதாகக் கூறி, ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்ட…
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிச் சிறுமி திடீரென காணாமல் போனதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில்…