Categories: சினிமா

நிஜமாவே எழில் சீரியலை விட்டு ஏன் போனாருன்னு தெரியல.. ஒரு அப்பாவா நான் இதை அவருக்கு சொல்றன்.. கோபி வெளியிட்ட வீடியோ..!!

Spread the love

விஜய் டிவியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் வி.ஜே விஷால் நடித்தார். இந்த சீரியல் மூலமாகத்தான் அவர் பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியை மாகாபாவோடு இணைந்து அவர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

ஒரு சில ஷார்ட் பிலிம்ங்களிலும் விஷால் நடித்துள்ளார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக விஷால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவர் சீரியலில் இருந்து வெளியேறியதற்கான காரணம் தெரியவில்லை. அவருக்கு பதிலாக நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியலில் நடிக்கும் நவீன் எழில் கதாபாத்திரத்தில் தற்போது நடிக்கிறார்.

 

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ்குமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, இதுவரை எழிலாக நடித்த விஷால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். அவர் கேரக்டரில் இன்னொரு நடிகர் நடிக்கிறார். அவருக்கு எனது ஆசிகளும் வாழ்த்துக்களும். அவர் நன்றாகத்தான் நடிக்கிறார்.

விஷால் எதற்காக சீரியலில் இருந்து விலகினார் என்பது உண்மையிலே எனக்கு தெரியாது. அவர் எதையும் சொல்லவில்லை. ஆனால் சிறகு முளைத்து இங்கிருந்து பறந்து போக வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு நான் தந்தையாக என்ன சொல்ல வேண்டும். பத்திரமா பார்த்து வானத்தில் பறக்க வேண்டும் என்று தான் சொல்லி அனுப்ப முடியும்.

அதைத்தான் அவருக்கு கூறி இருக்கிறேன். எங்க போனாலும் நல்லபடியாக இருக்க வேண்டும். நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நீங்களும் அவரது பியூச்சர் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் கொடுங்கள் என பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

“நாவடக்கம் வேண்டும்.. வீதியில் இறங்கி போராடுவோம்”.. தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு எச்சரிக்கை விடுத்த கே.பி.முனுசாமி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, என்.ஆர்.சிவபதி மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் தங்களை…

4 minutes ago

அரசு ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!.. இறுதியாக வந்தாச்சு நல்ல செய்தி.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு..!!

தமிழக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. தற்போது ஆசிரியர்கள் தரப்பில்…

14 minutes ago

“தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்”… ஒரே மேடையில் இணைந்த எடப்பாடி – அண்ணாமலை – சீமான் – விஜய் கட்சி.. பின்னணியில் அன்புமணி…!

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைமையில் சென்னையில்…

16 minutes ago

“சொன்ன வாக்குறுதி என்னாச்சு?”…. முதல்வர் விஜய் மீது உச்சகட்ட அப்செட்டில் சி.வி.சண்முகம் – விஜயபாஸ்கர்… கசிந்த அதிர்ச்சித் தகவல்….!

தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள்…

22 minutes ago

பாஜக மட்டுமில்லை… அண்ணாமலையால் தவெக – திமுக – அதிமுக – நதக-க்கு விழும் பலத்த அடி… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்…!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து முற்றிலும் விலகி 'வீ தி லீடர்'…

27 minutes ago

அதிமுகவிற்கு அடுத்தடுத்த ஷாக்.. தவெகவில் இணைந்த உடுமலை ராதாகிருஷ்ணன்… தமிழக அரசியலில் புதிய திருப்பம்…!

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள்…

32 minutes ago