தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து முற்றிலும் விலகி ‘வீ தி லீடர்’ (We the Leader) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே சுமார் 14 லட்சம் பேர் இதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதனை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றி, வரும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த திடீர் முடிவு, அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெற்ற மாபெரும் வெற்றியால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட ஒன்றாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் இந்த வெளியேற்றம் அவர் சார்ந்திருந்த பாஜகவிற்கே முதற்கட்டமாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவர் விலகியதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலர் பாஜகவிலிருந்து அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். அண்ணாமலை தலைவராக இருந்தபோது ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் பாஜவைச் சுற்றி ஒரு விவாதம் எப்போதும் இருந்து வந்தது. தற்போது அவரைப் போன்ற ஆளுமைமிக்க, ஆக்ரோஷமான ஓர் இளம் தலைவரைக் கண்டறியாவிட்டால், தமிழகத்தில் பாஜவின் செல்வாக்கு மீண்டும் கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியுள்ளது.
மறுபுறம், திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கும் இந்த புதிய இயக்கம் புதிய தலைவலியைத் தந்துள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் சோர்வடைந்துள்ள திமுக நிர்வாகிகள், தங்களது எதிர்கால அரசியல் வாழ்வைக் கருத்தில் கொண்டு அண்ணாமலையின் அமைப்பை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அதேபோல், உள்கட்சிப் பூசல்களாலும், கொங்கு மண்டலத்தில் தவெக ஏற்படுத்திய தாக்கத்தாலும் பலவீனமடைந்துள்ள அதிமுகவிற்கு, அதே கொங்கு பகுதியைச் சேர்ந்த அண்ணாமலையின் வருகை மேலும் சரிவை ஏற்படுத்தக்கூடும். மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இச்சட்டமன்றத் தேர்தலில் 4 சதவீத வாக்குகளை இழந்து, காரைக்குடியில் சீமான் 4-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால் தொய்வடைந்துள்ள நாம் தமிழர் கட்சியினரும் அண்ணாமலை அணியில் இணைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் ‘தவெக’ அரசுக்கும் அண்ணாமலையின் அரசியல் வருகை கடுமையான சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. விஜய்யைப் போலவே அண்ணாமலைக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருப்பதால், தவெகவின் இளைஞர் வாக்கு வங்கியில் அண்ணாமலை கைவைக்கக்கூடும். அதுமட்டுமன்றி, ஆளுங்கட்சிக்கு எதிராக இயல்பாகவே உருவாகும் எதிர்ப்பலைகளை அறுவடை செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். விஜய்யை விடவும் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாகப் பேசி அரசியல் செய்யும் ஆற்றல் கொண்டவர் என்பதால், தவெக அரசுக்கு சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் அவர் ஒரு வலுவான எதிர்ப்பாளராக உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை.
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…
கடலூர் குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு ஊழியர் சமயவேலு என்பவர்…
சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பு நள்ளிரவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது,…
தமிழகத்தில் இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 06, 2026)…