தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், திரைமறைவில் மற்றொரு பரபரப்பு வெடித்துள்ளது. அதிமுகவில் பிளவு ஏற்படுத்தி, தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெக தலைமை மீது கடும் வருத்தத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசை ஆதரித்தனர். இந்த அரசியல் நகர்வின் பின்னணியில் இருந்து ஒட்டுமொத்தமாக இயக்கியவர்கள் சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும்தான். ஆனால், தவெகவை ஆதரிக்கும் போது கொடுக்கப்பட்ட அரசியல் உத்தரவாதங்களை முதல்வர் விஜய் நிறைவேற்றாததால், வேலுமணி உள்ளிட்ட 23 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவிற்கே திரும்பிவிட்டனர். இதில் 4 பேர் மட்டும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்துவிட்ட நிலையில், சண்முகமும் விஜயபாஸ்கரும் மட்டும் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் தவித்து வருகிறார்கள்.
இவர்களின் இந்த மௌனத்திற்கும் வருத்தத்திற்கும் பின்னால் மிகப்பெரிய ‘டீலிங்’ ஒன்று முறிந்ததே காரணம் என்று விபரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையின் போது, தவெக அமைச்சரவையில் அதிருப்தியாளர்களை இணைத்துக் கொள்வதோடு, இரு முக்கிய ஆஃபர்கள் கோரப்பட்டன. அதன்படி, சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா எம்.பி பதவியை, டெல்லி அரசியலுக்கு செல்ல ஆசைப்பட்ட விராலிமலை விஜயபாஸ்கருக்கு வழங்க வேண்டும் என்றும், தவெக அரசின் டெல்லி பிரதிநிதி பதவியை சி.வி.சண்முகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்றும் பேசப்பட்டு, அதற்கு தவெக தரப்பும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் முதல்வர் விஜய்யால் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தவெகவுக்கு கிடைக்கவிருந்த ராஜ்யசபா எம்.பி சீட் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார். இதனால் விஜயபாஸ்கரின் டெல்லி கனவு கலைந்துபோனது. வாக்குறுதி தடம் மாறியதால் அதிர்ச்சியடைந்துள்ள சி.வி.சண்முகமும், விஜயபாஸ்கரும் தங்களைச் சந்திக்க வருபவர்களிடம் தவெக தலைமை மீதுள்ள தங்களது அதிருப்தியை வெளிப்படையாகவே பகிர்ந்து வருகிறார்கள். எனினும், அடுத்தகட்ட நகர்வாக தவெக தலைமையுடன் இன்னும் ஒரு வலுவான டீலிங் பேச இரு தரப்பும் முயன்று வருவதாக அறிவாலய மற்றும் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…
திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…