“தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்”… ஒரே மேடையில் இணைந்த எடப்பாடி – அண்ணாமலை – சீமான் – விஜய் கட்சி.. பின்னணியில் அன்புமணி…!

Spread the love

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைமையில் சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில், தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்திகளான அதிமுக, காங்கிரஸ், தமிழக வெற்றி கழகம் (தவெக), பாஜக, நாம் தமிழர் கட்சி (நாதக), தேமுதிக, அமமுக, தவாக உள்ளிட்ட 42-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரடியாகப் பங்கேற்றனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஆளும் கட்சியோ அல்லது பிரதான எதிர்க்கட்சியோ கூட்டாத ஒரு கூட்டத்திற்கு, அனைத்துத் தரப்பினரும் ஒரே மேடையில் திரண்டிருப்பது அரிதினும் அரிதான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்திற்கு நேரில் வர இயலாத ஆளும் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியிருப்பது இதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக அன்புமணி ராமதாஸைத் தொடர்புகொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கைக்கு திமுகவின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.

மாநிலத்தில் சமூகநீதிக் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அனைத்துச் சமூகங்களின் உண்மையான மக்கள் தொகைக்கேற்ப அரசுத் திட்டங்களைச் சரியாக வடிவமைப்பதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம் என்று இக்கூட்டத்தில் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காகக் காத்திருக்காமல், பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைப் பின்பற்றி, தமிழ்நாடு அரசே தனியாக இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்காக 2008ஆம் ஆண்டின் மத்திய புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.

தாமதமின்றி இந்தக் கணக்கெடுப்பைத் தொடங்க ஏதுவாக, தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அல்லது ஒரு தனித்துவமான நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் திரட்டப்படும் துல்லியமான தரவுகள், எதிர்கால இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கும், சமூகநீதி சார்ந்த திட்டங்களுக்கும் வலுவான அடித்தளமாக அமையும் என்று தலைவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுக்குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னர் காவிரி நீர் விவகாரம் போன்ற மிக முக்கியமான மாநிலப் பிரச்சினைகளில் மட்டுமே இதுபோன்ற அரசியல் ஒற்றுமை சாத்தியமாகியிருந்தது; அதுவும் ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி கூட்டங்களில் மட்டுமே நடக்கும். ஆனால், இன்று ஆளும் தரப்போ அல்லது பிரதான எதிர்க்கட்சியோ இல்லாமல், பாமக போன்ற ஒரு கட்சி இத்தகைய பிரம்மாண்டமான கருத்தொற்றுமையை உருவாக்கியிருப்பது அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு அரசியல் முரண்பாடுகளைக் கடந்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் சமூகநீதி என்ற ஒரே குடையின் கீழ் பயணிக்க வைத்ததன் மூலம், அன்புமணி ராமதாஸ் தமிழக அரசியலின் மையப்புள்ளியாக மாறியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

Nanthini

Share
Published by
Nanthini

Recent Posts

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

3 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

5 minutes ago

பகீர்… வீட்டு வாசலில் விளையாடிய 4 வயது சிறுமி மாயம்… 45 நிமிடத்தில் போலீஸ் செய்த அதிரடி… ஹைதராபாத்தில் அரங்கேறிய சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…

12 minutes ago

சீனியர் vs ஜூனியர்!… முகமூடி கும்பலின் அட்டகாசம்… மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்… பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தக் களரி…!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…

14 minutes ago

மனசாட்சியே இல்லையா?… சந்தேகத்தால் வெடித்த விபரீதம்… மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்… அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…

25 minutes ago