அதிமுகவிற்கு அடுத்தடுத்த ஷாக்.. தவெகவில் இணைந்த உடுமலை ராதாகிருஷ்ணன்… தமிழக அரசியலில் புதிய திருப்பம்…!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் அதிரவைத்துள்ளது. சமீபகாலமாக திமுக, அதிமுகவைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டு வரும் சூழலில், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனைத் தொடர்ந்து, உடுமலை ராதாகிருஷ்ணனின் இந்த அதிரடி முடிவு அதிமுக தலைமைக்கு விழுந்த மற்றுமொரு பலத்த அடியாகக் கருதப்படுகிறது.

கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக தலைமை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தனது மனக்குமுறலை வெளிப்படையாகக் கொட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கடந்த 9 ஆண்டுகளாக தாங்கள் அதிமுகவில் பெயருக்குத்தான் இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், அண்மைய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக தலைமை எடுத்த சில முடிவுகள் தங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், ஆனால் அது குறித்து வெளியில் பேசி அரசியல்ாக்க விரும்பவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய முதல்வர் விஜய் குறித்துப் பேசிய அவர், தமிழக மக்களும் தங்களைப் போன்ற அரசியல்வாதிகளும் விஜய்யை ஒரு சாதாரண தலைவராகப் பார்க்கவில்லை என்று புகழாரம் சூட்டினார். அன்று தமிழகத்தை ஆண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை மக்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்து நேசித்தார்களோ, அதே போன்ற ஒரு மாபெரும் மக்கள் தலைவராகத்தான் இன்று முதலமைச்சர் விஜய்யையும் தாங்கள் பார்ப்பதாகக் கூறிய அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் நல ஆட்சியைத் தற்போது விஜய் கொடுத்து வருகிறார் என்றும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். அதற்கு உதாரணமாக, ஜெயலலிதா கொண்டு வந்த ‘அம்மா உணவகத்தை’ தற்போதைய தமிழக அரசு சீரமைத்து, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவெகவில் தங்களுக்குப் பதவிகள் மீது ஆசை இல்லை என்றும், உழைப்புக்கான மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்தால் மட்டுமே போதும் என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார். அந்த மரியாதையை தவெகவின் முக்கியப் புள்ளிகளான ஆதவ் அர்ஜுனாவும், புஸ்ஸி ஆனந்தும் தங்களுக்கு உறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து கட்சியின் மாபெரும் வெற்றிக்காகத் தீவிரமாக உழைக்கப் போவதாகத் தனது எதிர்கால அரசியல் திட்டத்தை அதிரடியாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

விடுதி மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய… வார்டன் செஞ்ச வேலை.. தட்டிக்கேட்டதால் சாதி ரீதியாக இழிவுபடுத்திய தாளாளர்… திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…

2 minutes ago

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…” நள்ளிரவில் வார்டன் கொடுத்த பாலியல் தொல்லை.. திண்டுக்கல் கல்லூரியில் மாணவிகள் கதறல்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்…

8 minutes ago

ச்சீ இவனெல்லாம் மனுஷனா…? குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த .. தாய்க்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் அதிரடி கைது..!!

கடலூர் குழந்தைகள் நல மையத்தில் குழந்தையைச் சேர்க்க வந்த பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு ஊழியர் சமயவேலு என்பவர்…

8 minutes ago

கில்லர் பட ஷூட்டிங்கில் விபத்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார் எஸ்.ஜே சூர்யா..!!

சென்னை பெரம்பூர் பின்னி மில் வளாகத்தில் 'கில்லர்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக்காட்சி படப்பிடிப்பு நள்ளிரவில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது,…

11 minutes ago

தனியார்மயமாகும் டாஸ்மாக் கடைகள்..? அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமான அறிவிப்பு..!!

தமிழகத்தில் இதுவரை 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 06, 2026)…

12 minutes ago