போன் எடுக்காம போனதுக்கு இப்படியா?.. விபத்து நாடகம் ஆடிய கள்ளக்காதலன்… 3 மாத கர்ப்பிணியை பெல்ட்டால் அடித்துக் கொன்ற கொடூரம்.. நெஞ்சு பதறவைக்கும் புதுச்சேரி கொலை சம்பவம்..!!

Spread the love

புதுச்சேரி திலகர் நகரைச் சேர்ந்த பியூடிஷனான ராஜமாதங்கி (25) என்பவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் சரவணன் சென்னையில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, ராஜமாதங்கிக்கு பள்ளிப் பருவத்தில் அறிமுகமான கோட்டகுப்பத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (29) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் இருந்து வந்ததை அறிந்த கணவர் சரவணன் மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் சுரேந்திரனும் ராஜமாதங்கியும் சரவணனைச் சந்தித்து விவாகரத்து கோரியதால், மனமுடைந்த சரவணன் மனைவியைப் புதுச்சேரி வீட்டில் விட்டுவிட்டு சென்னை சென்றுவிட்டார். இதன் பின்னர் சுரேந்திரனுடன் ராஜமாதங்கி அடிக்கடி பழகி வந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுரேந்திரன் தனது தொலைபேசி அழைப்பை எடுக்காததால் ஆத்திரமடைந்த ராஜமாதங்கி, கோட்டகுப்பத்தில் உள்ள அவது வீட்டிற்குச் சென்று தகராறு செய்து, அவரது தாயாரையும் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன், வீட்டில் இருந்த நாயைக் கட்டும் பெல்ட்டால் ராஜமாதங்கியைச் சரமாரியாக அடித்துள்ளார். அப்போது வலி தாங்காமல் ஓடிய ராஜமாதங்கி, அருகில் இருந்த கால்வாயில் விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சுரேந்திரன் அவரைப் பைக்கில் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, தட்டாஞ்சாவடி அருகே விபத்து நடந்ததாக நாடகமாடி, கணவர் சரவணன் எனப் போலியாகக் கையெழுத்திட்டு முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே ராஜமாதங்கி மயங்கி விழுந்ததால், அவரது தாயார் மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த 3 மாத கர்ப்பிணியான ராஜமாதங்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் போக்குவரத்து போலீசார் விபத்து என வழக்குப் பதிவு செய்தாலும், சிசிடிவி காட்சிகளில் விபத்துக்கான அறிகுறி இல்லாததால் சந்தேகம் அடைந்து சுரேந்திரனைப் பிடித்து விசாரித்தபோது, அடித்துக் கொலை செய்த உண்மை வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து தன்வந்திரி நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து சுரேந்திரனைச் சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தமிழகப் பகுதியான கோட்டகுப்பத்தில் நடந்ததால், வழக்கை அங்குள்ள காவல் நிலையத்திற்கு மாற்றப் புதுச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

12 minutes ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

17 minutes ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

21 minutes ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

25 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

30 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

31 minutes ago