தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில், பள்ளிக்கு வந்த குழந்தை ஒன்று தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. அப்போது அங்கிருந்த அங்கன்வாடி பணியாளரான கலைச்செல்வி என்பவர், அழுகையை நிறுத்தாத அந்தக் குழந்தையைச் சாக்கு மூட்டையில் வைத்துக் கட்டிவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கண்டனத்தையும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அங்கன்வாடி பணியாளர் கலைச்செல்வியைப் பணியிடை நீக்கம் (Saspend) செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அந்தக் குழந்தையை மிரட்டிய பணியாளர் கலைச்செல்வி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் பராமரிப்பு மையங்களிலேயே இப்படியான அத்துமீறல் நடந்திருப்பது மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…