Categories: சினிமா

நாளை திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள்.. நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றிவாகை சூடுவாரா ஹிப்பாப் ஆதி..?

Spread the love

தமிழ் சினிமாவில் இந்த வாரம் ஹிப்ஹாப் ஆதியின் பிடி சார் முதல் நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போகும் நடிகர் ராமராஜனின் சாமானியம் படம் வரை இந்த வாரம் வெளியாக போகும் திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தொடங்கி முதல் ஐந்து மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய ஹிட் என எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை.

மலையாள சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்கள் கூட 100 கோடி, 200 கோடி என்று வசூல் சாதனை செய்து வரும் நிலையில் தற்போது வரை அரண்மனை 4 திரைப்படம் மட்டுமே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசூல் சாதனை செய்திருக்கின்றது, இந்நிலையில் இந்த வாரம் அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல்களை பற்றி பார்ப்போம்.

 

சாமானியன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் சாமானியன். ஆக்சன் கலந்த திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இப்படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி, எம்எஸ் பாஸ்கரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அடுத்ததாக பிடி சார் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பிடி சார். வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கே கணேஷ் அவர்கள் தயாரித்திருக்கின்றார், இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பகலறியான் எட்டுத்தொட்டாகள், ஜிவி போன்ற திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர் வெற்றி. தற்போது இவரது நடிப்பில் பகலறியான் என்ற திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. சென்சார் பிரச்சினை காரணமாக வடக்கன் பட ரிலீஸ் அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களும் நாளை வெளியாக உள்ள நிலையில் எந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Mahalakshmi

Recent Posts

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

1 minute ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

6 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

11 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

12 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

16 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

18 minutes ago